'நீட்' என்னும் மெகா மோசடி - ஒரு சாமானியனின் பதிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

'நீட்' என்னும் மெகா மோசடி - ஒரு சாமானியனின் பதிவு!

“நீட் என்னும் மோசடி.

தேர்வை நடத்துபவர்களே முறைகேட்டிற்கு துணை போகும் அவலம்.
வழக்கத்தைவிட இந்த ஆண்டு நீட் தேர்வு முறை கேடுகள் வினாத்தாள் கசிவுகள் அதிகம் அரங்கேறி வருகிறது. ராஜஸ்தான், டில்லி, பீகார் என பல மாநிலங்களில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குஜராத்தில் நடந்த ஒரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம்.
குஜராத்தின் பன்ச்மகால் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த மே அய்ந்தாம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட கல்வி அதிகாரியுடன் சேர்ந்து முழுமையாக விசாரணை நடத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர்.

அப்போது தேர்வு மய்யத்தின் துணை கண்காணிப் பாளரின் ஷ்லீணீtsணீஜீஜீ உரையாடலில் முறைகேடு நடந்த தற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
தேர்வு எழுதும் 16 மாணவர்கள் பெயர்கள் மற்றும் அவர்களது தேர்வு எண் ஆகியவை இருந்துள்ளது மாணவர்கள் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற உதவி செய்ய வேண்டும் என்பது தான் துணை கண்காணிப்பாளருக்கு கொடுக்கப்பட்ட வேலை.

இதற்கு ஒரு மாணவருக்கு 10 லட்ச ரூபாய் என பேரம் பேசப்பட்டுள்ளது. 7 லட்ச ரூபாயை முன்பண மாகவும் தரப்பட்டுள்ளது. விசாரணையில் அது துணை மய்ய கண்காணப்பாளரின் வாகனத்திலிருந்தும் கைப் பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள துணை மய்யக் கண்காணிப்பாளரின் வாக்குமூலத்தின் படி.
அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை, குறிப்பிட்ட மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த விடைகளை மட்டும் எழுதிவிட வேண்டும், அதற்கு பிறகு வினாத் தாள்களை ‘சீல்’ இடுவதற்கு முன்பாக துணை மய்யக் கண்காணிப்பாளர் அவற்றை நிரப்பி பிறகு அதை ‘சீல்’ இடுவார்.

முறைகேட்டில் ஈடுபட்ட துணை கண்காணிப் பாளரின் பெயர் துஷார்பாட் – அதேபோல இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட பரசுராம்ராய்,, ஆரிப் வோரா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது கவனத்துக்கு வந்த ஒரு விஷயம். அதே பன்ச் மகால் மாவட்டத்தில் எத்தனை தேர்வு மய்யங்களில் இப்படி முறைகேடு நடந்ததோ? குஜராத் முழுவதும் எத்தனையோ? நாடு முழுவதும் எத்தனையோ?

எத்தனை மாணவர்களின் மருத்துவக் கனவு மண் போட்டு மூடப்பட்டிருக்கிறது? எதிர்காலத்தில் எத் தனை பேர் இப்படியான தரமற்ற மருத்துவர்களால் மண்ணுக்குள் போகப் போகிறார்கள்?
ஒரு பக்கம் தேர்வு பயிற்சி மய்யங்கள் பெற்றோரின் பணத்தையும், மாணவர்களின் உயிரையும் தின்று கொழிக்கின்றன. மற்றொரு பக்கம் முறைகேடுகள் புரையோடிப்போயுள்ளது.
என்று தீர்வு வரும் இதெற்கெல்லாம்? என்றும் மாயும் இந்த கொடுமை? பணம் இருப்பவனுக்கும், மோசடி செய்யத் தெரிந்தவனுக்கும் தான் வாய்ப்பு வழங்குமென்றால் என்ன கல்வி முறை இது?” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment