மோடி எப்படி ஜெயிப்பார்? பிரசாந்த் கிஷோருக்குக் கரண் தாப்பர் பதிலடி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

மோடி எப்படி ஜெயிப்பார்? பிரசாந்த் கிஷோருக்குக் கரண் தாப்பர் பதிலடி!

featured image

புதுடில்லி, மே 25 பிரதமர் மோடிதான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று பிரசாந்த் கிஷோர் கூறிய நிலையில் அவரிடம் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘என் னைப் பொறுத்த வரையில், நான் சொல்ல போகும் பதில் சில சமயங் களில் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத் தலாம் என்று கூறுவேன். கடந்த அய்ந்து மாதங்களாக, நீங்கள் தேர் தலை எப்படி மதிப்பீடு செய்தாலும், மோடி தலைமையிலான பாஜக திரும்பி வருவதாகத் தெரிகிறது. கடந்த 5 மாதங்களாக அதுதான் நிலவரம்.
அது அப்படியே திடீரென மாற் றம் அடையாது. மோடிதான் திரும்ப வரப்போகிறார். கடந்த தேர்தலின் அதே எண்ணிக்கையை அவர்கள் பெறலாம் அல்லது அதைவிட சற்று சிறப்பாக பெறலாம்.
இதுதான் முடிவாக இருக்கப் போகிறது. நாம் அடிப்படைகளை பார்க்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் மீதும் அதன் தலை வர் மோடி மீதும் கோபம் இருந்தால் ஆட்சி இருக்காது! ஆனால், அந்த சூழ்நிலை இப்போது இல்லை.
மோடிக்கு எதிராக மக்களிடம் மாற்றுக்கருத்து இருக்கிறதா என்ப தைப் பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. சில மக்கள் மோடிக்கு எதி ராக வாக்களிக்க முடிவு செய்யலாம். ஆனால் மோடிக்கு எதிரான அலை இல்லை. இதுவரை, மோடி மீது மக்களிடையே பரவலான கோபம் இருப்பதாக நாம் கேள்விப்பட்டதே இல்லை. பாஜக கண்டிப்பாக மீண் டும் ஆட்சி அமைக்கும். மொத்த முள்ள 543 மக்களவைத் தொகுதி களில் முன்பை விட கூடுதல் இடங் களை கூட பெற்று அவர்கள் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித் துள்ளார்.

கரண் தாப்பர் கேள்வி
பிரதமர் மோடிதான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று பிரசாந்த் கிஷோர் கூறிய நிலையில் அவரிடம் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப் பர் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், ‘‘தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறினீர்கள், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வேரோடு அறுக்கப்படும்‘‘ என்று கூறினீர்கள். ஆனால் இரண்டிலும் காங்கிரஸ் வென்றது.
இப்போது ‘பாஜக வெல்லும்.. மோடி வெல்ல வாய்ப்புள்ளது’ என்று எப்படி சொல்கிறீர்கள்” என்று கரண் தப்பார் கேட்டுள்ளார். இதற்குக் கோபம் அடைந்த பிரசாந்த் கிஷோர், கடுப்பாகி உங்களிடம் ஆதாரம் இருக்கா.. வீடியோ இருக்கா என்று மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளார்.
இதையடுத்து பிரசாந்த் கிஷோர் பேசிய பேட்டிகளை தேதி வாரியாக கரண் தாப்பர் குறிப்பிட்டு அதை காண்பித்து அவருக்கு பதிலடி கேட் டுள்ளார்.

No comments:

Post a Comment