ஒரு ராணுவ வீரருக்கு விமானப் படை வீரர்கள் மூலம் மறுவாழ்வு கிடைக்க உதவியுள்ளது இன்றைய அறிவியல் வளர்ச்சி.
லடாக் பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் போர்க்கருவிகள் சிலவற்றை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இயந்திரத்தில் சிக்கி அவரது வலது கை துண்டிக்கப்பட்டு தனியாகவே விழுந்துவிட்டது. நம் நாட்டில் மனித நேயர்களுக்கா பஞ்சம்?
விமானப் படையினர் இதைக் கேள்விப்பட்டதுமே செயலில் இறங்கி யுள்ளனர்.
லடாக் மாவட்ட லெஹ் விமான நிலையத்திற்கு அந்த வீரரைக் கொண்டு வந்து சூப்பர் ஹெர்குலஸ் எனும் விமானத்தில் ஏற்றி நான்கு மணி நேரத்திற்குள் டில்லியில் உள்ள Research Referral (R & R) எனும் ராணுவ மருத்துவமனையில் சேர்ந்துவிட்டனர்.
துண்டிக்கப்பட்ட கையையும் கையோடு கொண்டு வரத் தவறவில்லை அவர்கள்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து துண்டிக்கப்பட்டிருந்த வலது கை சரியாகப் பொருத்தப்பட்டு விட்டது. ராணுவ வீரர் படு ஜாலியாக புன்னகைப்பதைப் பாருங்கள்.
தலைவிதி, கர்ம வினை என்பதெல்லாம் ‘ஜூம்லா’! மூடநம்பிக்கைகள் ‘கை’விட்டு விடும். அறிவியல்? அது ‘கை’ கொடுக்கும்.
No comments:
Post a Comment