கடவுள் அவதாரமும் காரணங்களும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

கடவுள் அவதாரமும் காரணங்களும்!

பிரதமர் மோடி சுட்ட எத்தனையோ வடைகளுக்கெல்லாம் பெரிய வடை யாக வந்திருக்கிறது, ‘நான் கடவுளால் அனுப்பப்பட்டவன்’ என்ற அவரது பிதற்றல். அவர் அப்படிச் சொல்வதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று இளஞ்செழியன் என்பவர், மனநல மருத்துவர் ஜி.ராமாநுஜம் சொல்லும் விடயங்களைக் குறிப்பிட்டு தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதி விட்டுள்ளார்:
தன்னைக் கடவுள் அவதாரம் அல்லது தனக்குக் கடவுள் அருள் இருப்பதாக ஒருவர் சொன்னால், மூன்று காரணங்கள் இருக்கலாம்:
1. மனச்சிதைவு, மன எழுச்சி போன்ற 24 நோய்களினாலோ போதைப் பொருட்களை உபயோகித்ததாலோ விசேட சக்தி இருப்பது போன்ற மனப்பிறழ்வுகள் (Delusions)  மற்றும் கடவுள்(Auditory Hallucination)  போன்றவை ஏற்படலாம்.
சிலருக்குக் கூடுதலாக, தானே பேசுவது, சிரிப்பது, குளிக்காமல் இருப்பது, ஒரே பொசிஷனில் பல நாட்கள் இருப்பது போன்ற பல்வேறு அறிகுறிகளும் இருப்பதால், இவர் களைச் சாமியாராக ஆக்கி வழிபட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
இவர்கள் தங்களைத் தாங்களே நம்புவார்கள். எல்லா நாளும், 24 மணி நேரமும் இவர்களுக்கு இந்த அறி குறிகள் இருக்கும்.
தொலைக்காட்சி விவாதம் மூலம் பிரபலமான ஒரு சாமியார் இப்படித்தான் ‘நான் கடவுள் அவதாரம், பறவைகள் பேசும் மொழி எல்லாம் எனக்குக் கேட்கும்’ என்றார். இவர்களுக்குத் தேவை சிகிச்சை.
2. இன்னும் சிலர் மற்ற நேரங்களில் நார்மலாக இருந்தாலும், உணர்ச்சி வசப்படும் போது அருள் வந்து, சாமி வந்து ஆடுவார்கள். குடிப்பது, மாமி யாரை அடிப்பது போன்ற நிறைவேறாத அடிமன ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டாலும், இவர்களால் பெரிதாக மற்றவர்களுக்குப் பாதிப்பு இருக்காது. பக்தி அதிகமாகித் தன்னையே மறந்து பரவசம் அடைவதும் ஆன்மிக அனுபவங்களும் இதன் மிதமான வகை (Trance). இதை நோய் என்று சொல்ல முடியாது. எனினும், சில சமயம் அள வுக்கு அதிகமானால், இவர்களுக்கும் உள வியல் சிகிச்சை தேவைப் படலாம்.
3. வேண்டுமென்றே நான் கடவுளின் அவதாரம்,தனக்கு விசேஷ சக்திகள் இருக்கின்றன எனப் போலியாகப் பொய்சொல்லிப் பிறரை ஏமாற்றுவது. “இவர்களுக்குத் தேவை தண்டனை”.

– சமூகவலைதளத்திலிருந்து

No comments:

Post a Comment