இதுதான் பிஜேபியின் குஜராத் மாடலோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 14, 2024

இதுதான் பிஜேபியின் குஜராத் மாடலோ!

200க்கு 212 மதிப்பெண் பெற்றாராம் ஒரு மாணவி

அகமதாபாத், மே 14 குஜராத்தில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் பயிலும் 4 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு 200 மதிப்பெண்களுக்கான தேர்வில் 212 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட ‘மார்க் ஷீட்’ அடங்கிய பதிவு இணையத்தில் பரவி வருகிறது.
திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில், பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு விடைத்தாளை திருத்தி மதிப்பெண் போட்டு கொடுத்திருப்பார்.

அப்போது ஆசிரியர் சொல்வார், யாருக்கும் “டோட்டல் மிஸ்டேக்” இருந்தால் கொண்டு வாருங்கள் என்று.. மேலும் பெயில் ஆன மாணவர் களுக்கு அடியும் கொடுப்பார். இதனால் ஆசிரியரிடம் அடி வாங்காமல் தப்பிப்பதற்காக ஒரு மாணவர் சிவப்பு மை பேனாவால் மதிப்பெண்களை திருத்தி, டோட்டல் மிஸ்டேக் சார் என்று கொடுத்து “பாஸ்” ஆகிவிடுவார்.
இதை பார்த்து அருகில் உள்ள மாணவரும் அவரை போலவே மதிப்பெண்களை கூட்டி போட்டு ஆசிரியரிடம் கொடுத்துவிடுவார்.

ஆனால், தவறை செய்தாலும் அதை திருந்த செய்யவேண்டும் என்பதை அறியாமல், மொத்த மதிப்பெண்ணை தாண்டி அவர் மார்க்கை போட்டுவிடுவார். இதனால் அவர் ஆசிரியரிடம் மாட்டிக்கொள்வதோடு சக மாணவரையும் காட்டிக்கொடுத்து அடி வாங்க வைத்து விடுவார். இப்படியாக அந்த திரைப்பட காட்சி அமைக்கப்பட்டிருகும்.
இந்த நிலையில், இதனை மெய்பிக்கும் வகையில் குஜராத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதாவது, குஜராத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு 200க்கு 212 மார்க் போட்டுள்ளது தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் விவாதத்திற்குள்ளாக்கியுள்ளது.
4ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியின் மதிப்பெண் சான் றிதழ் தான் தற்போது இணையத் தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்த பள்ளி மார்க் ஷீட் தற்போது இணையத்தில் பரவி பலரையும் ஆச்சரியப்படுத்தி வரு கிறது. குஜராத் மாவட்டம் கார சானா கிராமத்தில் ஒரு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 4 ஆம் வகுப்பு மாணவி தான் குஜராத்தி மொழி பாடம் மற்றும் கணக்கு பாடத்தில் நிர்ணயிக்கப்பட்ட 200 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்று அதாவது 211, 212 மதிப் பெண்கள் பெற்றுள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட 200 மதிப் பெண்களை விட அதிகம் பெற்றது எப்படி? என்ற கேள்வி எழுந்த துடன் இது சமூக வலைத்தளத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள் ளது. இப்படி கவனக்குறைவாக ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள் என்றும், இதனால் கல்வியின் தரம் குறித்து கவலை ஏற்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.
மாணவர்கள் தான் ஆசிரிய ரிடம் அடி வாங்குவதில் இருந்து தப்பிப்பதற்காக மதிப்பெண்களை கூட்டி போட்டு மாட்டிக் கொள் கிறார்கள் என்றால், ஆசிரியரும் இப்படி மதிப்பெண்களை தவறாக கூட்டிப் போடுவது எப்படி? இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர் பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

நாடு முழுவதும் பள்ளி பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்து மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது. தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வரு கின்றது. அந்த வகையில், தமிழ் நாட்டில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை பாடத்திட்டத்தின் கீழ் ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ – மாணவிகளின் தேர்வு முடிவுகள் வெளியானது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் பல்வேறு சவால்களையும் கடந்து மாணவ மாணவிகள் பலரும் சாதித்து காட்டியுள்ளனர். இதி லும், குறிப்பாக நாங்குநேரியில் ஜாதிய வன்முறையால் பாதிக்கப் பட்ட மாணவர் கூட, பிளஸ் டூவில் 469 மதிப்பெண் பெற்று சாதித்து காட்டினார். இந்த நிலை யில், குஜராத்தில் பள்ளி மாணவி ஒருவர் 200 மதிப்பெண்ணுக்கு 212 மதிப்பெண் எடுத்துள்ள செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

No comments:

Post a Comment