சென்னை, மே 15-ஆப்பிரிக்க நாடுகளுக்கும், தென் அமெரிக்க நாடுகளுக்கும் செல்பவர்கள், மூன்று அரசு மய்யங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை போட்டு கொள்ள லாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை சைதாப் பேட்டை பகுதியில் குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தலை கட்சியின் மாவட்ட செயலாளரும், சுகாதா ரத்துறை அமைச்சருமான மா.சுப் பிரமணியன் நேற்று (14.5.2024) திறந்து வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:
ஆப்பிரிக்க நாடுகளுக்கும், தென் அமெரிக்காவின் ஒரு சில நாடுகளுக்கும் செல்பவர்களுக்கு மஞ்சள் காய்ச்சலை தடுப்பதற்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும் என்பது விதியாகும். இந்த ஊசி போட்டுச்சென்றால் மட்டுமே விமான நிலையங்களில், அந்த நாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி கிடைக்கும்.
அதேபோல் அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும் போதும் அந்த தடுப்பூசி போட் டிருக்க வேண்டும். கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் இந்த தடுப்பூசி போடப்பட்டு வந்தது. பின்னர், தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத் துவமனைகளில் தடுப்பூசி போட்டு கொள்பவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல விமான நிலைய நிர்வாகம் அனுமதிப்பதில்லை.
அதனால், கிண்டி கிங் இன்ஸ்ட் டியூட் வளாகம், சென்னை துறை முகத்தில் உள்ள மருத்துவ மய்யம், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள மருத்துவ மய்யம் என தடுப்பூசி போடப்படும் இடங்கள்மூன்றாக பிரிக்கப்பட்டு முழுநேரமும் தடுப் பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
மூன்று அரசு மய்யங் களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம்.
ஒன்றிய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் கர்ப்பிணிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. பயனாளர்களின் பட்டியலை உறு திப்படுத்துவதற்கு காலதாமதம் ஆகிறது. தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் இருப்பதால், ஜூன் 6ஆம் தேதிக்கு பின்னர், ஒன்றிய அரசின் அதிகாரிகளோடு பேசி விரைந்து உதவித் தொகை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த காலங்களைபோல இல் லாமல், டெங்கு தடுப்பு நடவடிக் கைகள் இப்போது முழு அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந் தால், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண் டும். வீட்டிலேயே சிகிச்சை பெறு வதை தவிர்க்க வேண்டும்.
இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத 51,919 மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட் டுள்ளன.
மன வருத்தத்தில் உள்ள 137 மாணவர்களுக்கு மனநல ஆலோ சகர்கள் நேரில் சென்றும், தொலை பேசி மூலமாகவும் ஆலோசனை கள் வழங்கி வருகின்றனர்.
-இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment