இந்து மக்கள் தொகை வீழ்ச்சி என்றும், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்றும் பிஜேபி பேசலாமா? எதிர்க்கட்சிகள் கண்டனம்
புதுடில்லி, மே.11- இந்தியாவில் 65 ஆண்டுகளில் இந்து மக்கள் தொகை 7.8 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், முஸ்லிம்கள் மக்கள்தொகை 43.15 சத வீதம் அதிகரித்து இருப்பதாகவும் பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் கூறியுள்ளது.
அதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
167 நாடுகளில் ஆய்வு: பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில், 1950ஆம் ஆண்டுக்கும். 2015ஆம் ஆண் டுக்கும் இடையிலான 65 ஆண்டுகளில் மத சிறுபானமையினரின் பங்கு-நாடுதழு விய ஆய்வு’ என்ற ஆய்வில் ஈடுபட்டது. கவுன்சில் உறுப்பினர் ஷாமிகா ரவி தலைமையிலான குழு தயாரித்த இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 167 நாடுகளில் மதவாரியாக மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:- கடந்த 1950-ம் ஆண்டில் இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 84.68 சதவீதமாக இருந்தது. 2015ஆம் ஆண்டில் இது 78.06 சதவீதமாக குறைந்து விட்டது. அதாவது, 7.82 சதவீ தம் சரிந் துள்ளது. 1950ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மக்கள்தொகை 9.84 சதவீதம் இருந்தது. 2015ஆம் ஆண்டு 14.09 சதவீதமாக உயர்ந் துள்ளது. அதாவது. 43.15 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள்: கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 2.24 சதவீதத்தில் இருந்து 2.36சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 5.38 சதவீத வளர்ச்சி ஆகும். சீக்கியர்கள் மக்கள்தொகை 1.24 சதவீதத்தில் இருந்து 1.85 சதவீதமாக அதிகரித்துள்ளது. சம ணர்கள் மக்கள்தொகை 0.45 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது. பார்சிக்கள் மக்கள்தொகை 0.03 சதவீதத்தில் இருந்து 0.004 சதவீதமாக சரிந்துள்ளது. இது, 85 சதவீத வீழ்ச்சி ஆகும். உலகம் முழு வதுமே அந்தந்த நாடுகளில் பெரும் பான்மை மதத்தினர் எண்ணிக்கை சரிந்து வருவதையொட்டி, இந்தியாவிலும் பெரும் பான்மையினர் எண்ணிக்கை குறைந் துள்ளது. சமூகத்தில் பன்முகத்தன்மையை வளர்ப்பதற்கு உகந்த சூழ்நிலை நிலவுகிறது.
அண்டைநாடுகள்: ஆனால், அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, பூடான். ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அந்தந்த நாட்டின் பெரும்பான்மை மதத்தினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சிறுபான்மையினர் எண்ணிக்கை சரிந்துள்ளது. அதனால்தான், பிரச்சினை வரும்போது அங்குள்ள சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வரு கின்றனர். முஸ்லிம் பெரும்பான்மை நாடு களில், மாலத்தீவில் மட்டும் முஸ்லிம்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித் துள்ளன.
டி.ராஜா: இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற தேர்தல் நடக்கும்போது இந்த அறிக்கையை வெளியிட்டது ஏன்? ஏற்கெனவே மதரீதியில் வாக்குகளை ஒருங்கிணைக்கும். முயற்சி யில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். பா.ஜனதாவின் அரசியலுக்குத்தான் இது உதவும். மேலும், மோடி, அரசு வந்த பிறகு எந்த கணக்கெடுப்பும் நடத்தியது இல்லை. இதற்கு மட்டும் எப்படி தரவுகள் கிடைத்தன? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தேஜஸ்வி யாதவ் : ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறிய தாவது:- கடந்த 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு இன் னும் நடத்தவில்லை. அதற்கு பதிலாக இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு மக்களை திசைதிருப்பி, வெறுப்புணர்வை பரப்ப நினைக்கின்றனர். இதுதான் பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவின் செயல்திட்டம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment