சென்னை, மே 14- வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட படிப்பு, எம்.ஏ. (தொழி லாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜி.டி. எல்.ஏ (தொழிலாளர் நிர்வா கத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு), தொழிலா ளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட் டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. (தொழிலா ளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல் கலைக் கழகத்தால் அங்கீகரிக் கப்ப ட்டுள்ளன. பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) படிப்புகள் தமிழ்நாடு அரசின் அங்கீகாரத்துடன் நடை பெற்று வருகின்றது.
பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ (தொழிலா ளர் மேலாண்மை), பிஜி.டி. எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகிய பட்ட / பட்ட மேற்படிப்பு / பட்டய படிப் புகள் தொழிலாளர் நல அலு வலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலா ளர் நல அலுவலர் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.
இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனித வள மேம்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழி லாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் நல அலுவலர் (தொழிற்சாலைகள்) பதவிக ளுக்கு பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழி லாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. ஆகிய பட்ட மேற்படிப்பு / முதுநிலை பட் டயப்படிப்புகளை முன்னு ரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட் டய படிப்புகளுக்கும் விண்ணப் பிக்கலாம்.
விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படை யில் அரசு விதிகளின்படி தேர்ந் தெடுக்கப்படுவார்கள். தங்கும் விடுதி வசதி இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் ஆண் மாணவர்களுக்கு மட்டும்.
விண்ணப்பங்கள் 22.04.2024 அன்று முதல் வழங் கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்கள் வந்து சேர வேண் டிய கடைசி நாள்-15.05.2024.
விண்ணப்ப கட்டணம்-
ரூ. 200.-
For SC/ST- ரூ. 100/- (ஜாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும்)
விண்ணப்பங்களை அஞ்சலில் பெற, விண்ணப்ப கட் டணத்திற்கான ரூ.200/- (SC/ST- ரூ. 100.-)மற்றும் அஞ்சல் கட்டணம் ரூ.50–க்கான வங்கி வரைவோலையினை
“The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai”
என்ற பெயரில் எடுத்து பதிவுத் அஞ்சல் / விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.
மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை), முனைவர் இரா. ரமேஷ்குமார், இணைபேராசி ரியர் HOD/AO i/c, Mobile NO. 9884159410, தமிழ்நாடு தொழி லாளர் கல்வி நிலையம், மின் வாரிய சாலை, மங்களபுரம் (அரசு அய்.டி.அய் பின்புறம்) அம்பத்தூர், சென்னை -600 098. தொலைபேசி எண். 044-29567885 / 29567886. Email: tilschennai@tn.gov.in.
இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment