கொல்கத்தா, மே 12 மேற்கு வங்காள ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது ராஜ்பவனில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் கடந்த 2-ஆம் தேதி பாலியல் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த கொல்கத்தா காவல்துறையினர் சிறப்பு படை அமைத்தனர்.
ஆனால் ராஜ்பவனுக்குள் கொல் கத்தா காவல்துறையினர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் ராஜ்பவனில் பணிபுரியும் பணியா ளர்கள் காவல்துறையினரின் விசார ணைக்கு ஒத்துழைக்க வேண்டாம் எனவும் ஆளுநர் மாளிகை கேட்டுக் கொண்டது.
அதோடு தன் மீதான குற்றச்சாட்டை ஆளுநர் சி.வி.ஆனந்தா போஸ் திட்ட வட்டமாக மறுத்து வருகிறார். மேலும் ராஜ்பவனில் உள்ள சி.சி.டி.வி. கேம ராக்களில் கடந்த 2-ஆம் தேதி பதிவான காட்சிகளை சுமார் 100 பொதுமக்க ளிடம் ராஜ்பவன் வளாகத்தில் வைத்து அவர் திரையிட்டுக் காட்டினார்.
இந்த நிலையில், பாலியல் சர்ச் சையில் சிக்கியுள்ள ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் பதவி விலக வேண்டும் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் பதவியில் நீடிப்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும். அவர் பதவியில் இருக்கும் வரை நான் ராஜ்பவனுக்கு செல்ல மாட்டேன்” என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment