ஈரோடு, மே.15- பரிகார பூஜை செய்வதாக கூறி வயதான இணையருக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 9 பவுன் நகையை பறித்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு வி.வி.சி.ஆர்.நகரை சேர்ந்த வர் சண்முகம் (வயது 75). இவருடைய மனைவி செல்வி (வயது 70). தங்களது மகன். மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில் சண்முகம், செல்வி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
மூப்பு காரணமாக இருவருக்கும் கால்களில் மூட்டுவலி இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
பரிகாரம் செய்தால் மூட் டுவலியில் இருந்து நிவாரணம் பெறலாம் என்று சண்முகத்துக்கு தெரிந்தவர்கள் கூறி யுள்ளனர். இதையறிந்த ஒருவர் இணையரிடம் வந்து தான் பரிகார பூஜை செய்தவதாக கூறியுள்ளார்.
இதை நம்பி கடந்த 12ஆம் தேதி அவரை வீட்டிற்கு வரவழைத்து பூஜை செய்துள்ளனர்.
அப்போது பூஜையில் வைக்கப்பட்ட பாலை எடுத்து சண்முகம், செல்வி ஆகியோரிடம் கொடுத்து குடிக்கும்படி அந்த நபர் கூறியுள்ளார்.
அந்தப் பாலை இணையர் இருவரும் குடித்தனர். சிறிது நேரத்தில் இருவரும் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர்.
மறுநாள் அதாவது நேற்றுமுன்தினம் (12.5.2024) காலையில் செல்விக்கு மயக்கம் தெளிந்தது. எழுந்து பார்த்த போது அருகில் கணவர் சண்முகம் மயக்கம் அடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
செல்வி அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல், மோதிரம் உள்பட 9 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. மேலும், பீரோ திறக்கப்பட்டு கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.60 ஆயிரமும் திருட்டு போயிருந்தது.
பரிகாரம் செய்ய வந்தவர் பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துவிட்டு நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
உடனே இது பற்றி செல்வி ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கருங்கல் பாளையம் கமலாநகரை சேர்ந்த பெருமாள் (வயது 63) என்பவர்தான் இந்த நூதன மோசடியில் ஈடுபட் டது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் கருங்கல்பாளையத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பெருமாளை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசார ணையில் பரிகார பூஜைசெய்வதாக கூறி வயதான இணையரிடம் நகை பறித்ததை அவர் ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து 8 பவுன் நகையும், ரூ.50 ஆயிரமும் மீட்கப்பட்டது.
இதற்கிடையே வீட்டில் மயங்கி கிடந்த முதியவர் சண்முகம் சிகிச் சைக்காக மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார்.
No comments:
Post a Comment