ஓட்டுக்கு பணம் தராததால்
ஆந்திராவில் பொதுமக்கள் மறியலாம்
நகரி, மே.14- ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் தராததால் பலஇடங்களில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டுக்கு பணம்
ஆந்திராவில் 4-ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்த லுடன், அம்மாநில சட்டமன்றத்துக்கான தேர்தலும் நடந்தது. இதில் ஆளும் ஓய் எஸ்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இதற்கிடையே பல இடங்களில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் ஆயிரம் ரூபாய் முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பணம் கிடைக்காதவர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.
பா.ஜனதா மறியல்
பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் காக்கிநாடா மாவட்டம் பிட்டாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் அவரை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வங்கா கீதா போட்டியிடுகிறார். இதில் வங்கா கீதா ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. பணம் கிடைக்காத வாக்காளர்கள், வேட்பாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதே தொகுதியில் கொத்தபள்ளி மண்டலம் கொண்டவரம் என்னும் இடத்திலும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கே ஓட்டு போட வேண்டும் என சத்தியம் செய்தால்தான் பணம் வழங்குவோம் என்று நிர்வாகிகள் கூறியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
எம்.பி. அலுவலகம் முற்றுகை
இதேபோல் கடந்த சில நாட்களாக ராஜமகேந்திர வரம் நகரத்தில் வாக்காளர்களுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. வேட்பாளர் பரத் ராம் பணம் வினியோகம் செய்ததாக தகவல் வெளியானது. ஒரு சிலருக்கு மட்டும் பணம் வினியோகம் செய்துவிட்டு மற்றவர்களுக்கு கொடுக்காததால் பணம் கிடைக் காதவர்கள் எம். பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சேலைகளை தூக்கி
எறிந்து போராட்டம்
இதேபோல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோண சீமா மாவட்டம் ஆலமூர் மண்டலம் பிணபல்லா கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஓட்டுக்கு கொடுத்த சேலையை தூக்கி எறிந்து போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்வதாக கிடைத்த தகவலின்படி விசாகப்பட்டினம் கிழக்கு தொகுதி ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சத்யநாராயணா என்பவரது அலுவலகத்தை வாக்காளர்கள் முற்றுகையிட்டனர்.
அவர்களை காவல்துறையினர் விரட்டி அடித் தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் கொடுப்பதாக கிடைத்த தகவ லின்பேரில், குண்டூர் மாவட்டம் மங்களகிரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் லாவண்யா வீட்டின் முன்பு திரண்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்குதேசம் கட்சிக்கு ஓட்டுப் போட மாட்டேன் என்று கூறிய மூதாட்டியை வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றிய சம்பவமும் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் பொட்டி சிறீராமுலு நெல்லூர் மாவட்டம் ஓகூரில் நடந்துள்ளது. இதனை அறிந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர்கள். அவரை மற்றொரு வீட்டை காட்டி தற்போதைக்கு அந்த வீட்டில் குடியிருக்கும்படி ஏற்பாடு செய்தனர்.
No comments:
Post a Comment