'ரோடு ஷோ' வெறும் தெரு நாடகங்கள்! ஏழு கட்ட தேர்தலுக்கு பிறகு மோடி வீதிக்கு வந்து விடுவார் லாலு பிரசாத் கடும் தாக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 14, 2024

'ரோடு ஷோ' வெறும் தெரு நாடகங்கள்! ஏழு கட்ட தேர்தலுக்கு பிறகு மோடி வீதிக்கு வந்து விடுவார் லாலு பிரசாத் கடும் தாக்கு!

featured image

பாட்னா, மே 14- ஏழு கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி வீதிக்கு வந்து விடு வார் என பீகார் மேனாள் முதலமைச்சர் லாலு பிரசாத் விமர்சித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னா தொகுதியில் இறுதிக் கட்டமான ஜூன் 1ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரச் சாரத்தின் ஒருபகுதியாக ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கும் மோடி, பாட் னாவில் 2.5.2024 அன்று ‘ரோடு ஷோ’ நடத்தினார்.

இதுகுறித்து பீகார் மேனாள் முதல மைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலை வருமான லாலு பிரசாத் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
லாலு பிரசாத் தன் ட்விட்டர் பக்கத் தில், “பீகாரில் நலிந்து வரும் சர்க்கரை தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதாக கடந்த 2014 மக்களவை தேர்தலில் மோடி வாக்குறுதி அளித்தார். மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி கோரிக்கை, பாட்னா பல் கலைக் கழகத்துக்கு மத்தியத் தகுதி அளிப் பது ஆகியவற்றில் பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டது.
பீகார் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. கடந்த 2019 தேர்தலில் 39 தொகுதி களை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றி ருந்தாலும், பீகாரில் நீண்டகாலம் கூட் டணி ஆட்சியில் இருந்தாலும் பீகாருக்கு ஒன்றிய அரசு ஒன்றும் செய்யவில்லை. குஜராத் போன்ற மாநிலங்களே வளர்ச்சி திட்டங்கள், முதலீடுகளுக்கு விரும்பப் படும் மாநிலங்களாக உள்ளதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

பீகாருக்கு எதையும் செய்யாமல் இப் போது மோடி நடத்தும் ரோடு ஷோக்கள் வெறும் தெரு நாடகங்கள். இதனால் மாநிலத்துக்கு பெரிய நன்மைகள் கிடைக் காது. இது பீகார். 3 கட்ட தேர்தலுக்கு பின் மோடி சாலைக்கு கொண்டு வரப் பட்டுள்ளார். மீதமுள்ள தேர்தலுக்கு பிறகு அவர் வீதிக்கு வந்து விடுவார்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

No comments:

Post a Comment