எடப்பாடி, மே 15- சுயமரியாதை இயக்க நுற்றாண்டு, குடி அரசு இதழ் நூற்றாண்டு விழா – எடப்பாடி நகர திராவிடர் கழகம் சார் பாக 6.5.2024 அன்று மாலை 6.30 மணியளவில் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் நகர தலைவர் சா.ரவி தலை மையில் நடைபெற்றது.
நகர செயலாளர் சி.மெய்ஞான அருள் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். தலைமைக் கழக அமைப்பாளர் கா. நா.பாலு தொடக்க உரை யாற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஆத்தூர் விடுதலை சந்திரன் அவர் களின் மந்திரமா? தந்தி ரமா? நிகழ்ச்சி நடை பெற்றது.
பின்பு கழக சொற் பொழிவாளர் கோவை. க.வீரமணி சிறப்புரையாற் றினார்.
நீதிக்கட்சியின் வர லாறு பற்றியும், வகுப்பு வாரி உரிமை வரலாறு பற்றியும், வகுப்புவாரி உரிமை எந்தெந்த வழிக ளில் தட்டிப் பறிக்கப்படு கிறது என்பது பற்றியும், அதனைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், அதற்காகப் போராட வேண்டிய பொறுப்பும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது என்றும் தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா. பாலு எடுத்துரைத்தார்.
சுயமரியாதை இயக்க வரலாறு பற்றியும், குடி அரசு இதழ் இந்த இயக் கத்தை எப்படி வளர்த் தெடுத்தது என்பது பற்றி யும், சுயமரியாதை இயக் கமும், குடிஅரசு இதழும் இல்லாமல் போயிருந் தால் இந்த தமிழனின் கதி என்னாகியிருக்கும் என்பது பற்றியும், எதைக் கொடுத்தாலும், சூத்திர னுக்கு கல்வியைக் கொடுக் காதே என்ற மனுநீதி இன்று வரை இருந்திருந் தால் இன்றைய இளை ஞர்களின் நிலை என்னா கியிருக்கும் என்றும், அந்தக் கல்வியை மேலும் சிறப்பாக்க, பள்ளிக்கூடத் தில் காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, நான் முதல் வன் – போன்ற பல்வேறு திட்டங்களை நம்மு டைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் விளக்கி உரையாற்றினார்.
சண்முகசுந்தரம் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது.
No comments:
Post a Comment