சென்னை,மே14- சென்னை, நங்கநல்லூரில் பா.ஜ.க.வினர் மூன்று பிரிவுகளாக, தனித்தனியே செயல்பட்டு வருவ தாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், வாக்குச்சாவடி முகவர் செலவிற்கு கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை, நிர்வாகிகளுக்கு மண்டல பொறுப்பாளர்கள் சரிவர பிரித்துக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இது தொடர்பாக, ‘வாட்ஸப், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மோதல் வெடித்தது.
இந்நிலையில், சென்னை, கிழக்கு மாவட்ட நங்க நல்லூர் மண்டல பா.ஜ.க., – அய்.டி., பிரிவு தலைவர் பிரசன்னாவின் தந்தை விட்டல் மரணமடைந்தார். அப்போது, தேர்தல் வாக்குச்சாவடி பணம் விவகாரம் தொடர்பாக, நங்கநல்லூர் பா.ஜ.க., மண்டல தலைவர் ஜவகர் ஆம்ஸ்ட்ராங் (வயது 46), மண்டல செயலர் ஜெயக்குமார், (வயது 44) ஆகியோர், ராமச்சந்திரனிடம் வீண் தகராறில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ராமச்சந்திரன் அளித்த புகாரின்படி, பழவந்தாங்கல் காவல்துறையினர் விசாரித்து, இரு வரையும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (12.5.2024) நள்ளிரவு இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Tuesday, May 14, 2024
இதுதான் பி.ஜே.பி. தேர்தல் வாக்குச் சாவடிக்குப் பணம் வாட்ஸப்பில் வெடித்த மோதல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment