தற்கொலை-தேர்வு மோசடிகளைத் தடுக்க நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு! - மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் வலைதளப் பதிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

தற்கொலை-தேர்வு மோசடிகளைத் தடுக்க நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு! - மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் வலைதளப் பதிவு!

featured image

சென்னை, மே 12- தற்கொலை மற்றும் தேர்வு மோசடி களை தடுப்பதற்கு நீட் தேர்வை ரத்து செய்வதுதான், ஒரே தீர்வு என, தி.மு.க. மாநிலங்களவை உறுப் பினரும், மூத்த வழக் குரைஞரு மான பி.வில்சன் தெரிவித்துள் ளார். தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் வெளியிட்டுள்ள சமூக வலை தளப்பதிவில்:
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கடந்த 5ஆம் தேதி 571 நகரங்களில் 4 ஆயிரத்து 751 மய்யங்களில் நடை பெற்ற நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் பங் கேற்றதை சுட்டிக்காட்டினார். நீட் தேர்வுக்கு முந்தைய நாள் நீட் வினாத்தாள் வெளியான நிகழ்வில் பீகாரில் 13 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பி.வில்சன் தெரி வித்துள்ளார். இதன் மூலம் நீட் தேர்வு குறித்த கவலை மாணவர்களிடையே எழுந் துள்ளதாகவும், ஆனால் நீட் வினாத்தாள் மோசடியில் கைது செய்யப்பட்டவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

நீட் தேர்வில் நிலவும் சமத்துவமின்மை, சமூகப் பாகுபாடு போன்ற காரணங்களால், 26க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்ததை சுட்டிக் காட்டியுள்ள பி.வில் சன், தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யும் வகையில்கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலி னால் தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட இந்த மசோதா கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இன்னும் அனுப்பப்படவில்லை என்றும் பி.வில் சன் குற்றம் சாட்டியுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரத்தை ஆரம்பித்து 85 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகளைப் பெற்றுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தேர்வுத்தாள் கசிந்த இடங்களில் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு புதிதாக மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்ட வியாவுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மாண வர்கள் தங்கள் மருத் துவக் கனவை தொடர்வதற்கும் மற்றும் எதிர்காலத்தை பாது காப்பதற்கும் நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு என, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்குரை ஞருமான பி.வில்சன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் விளக்கமாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment