சென்னை அய்.சி.எப். : ரயில்வே நிறுவனத்தில் வேலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

சென்னை அய்.சி.எப். : ரயில்வே நிறுவனத்தில் வேலை

சென்னை அய்.சி.எப். : ரயில்வே நிறுவனத்தில் வேலை
1,010 பணியிடங்கள் – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சென்னை, மே 26 சென்னை அய்சிஎப் ரயில்வே நிறுவனத்தில் காலியாக உள்ள 1,010 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..
அய்சிஎப் எனப்படும் இந்திய ரயில்பெட்டி தொழிற்சாலை சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ளது. இந்திய ரயில்வேக்கு தேவையான ரயில் பெட்டிகள் இந்த தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய ரயில்வே நிர்வாகத்தால் இந்த தொழிற்சாலை நடத்தப்பட்டு வருகிறது. அய்சிஎப்-பில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப் போது உரிய அறிவிப்பு வெளி யிட்டு, பணி நியமனங்கள் நிரப்பப்படுகின்றன.
அதேபோல அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங் களுக்கும் அவ்வப்போது ஆட் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 1,010 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவ தற்கான அறிவிப்பை அய்சிஎப் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப் பிக்க தேவையான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..
பணியிடங்கள் விவரம்: கார் பெண்டர், எலெக்ட்ரீஷியன், பிட் டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், வெல்டர் உள்பட 9 வகையான பிரிவுகளில் மொத்தம் 1010 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பயிற்சி பணியிடங்களுக்கு பதவியின் தன்மைக்கேற்ப 10ஆ-ம் வகுப்பு, 12ஆ-ம் வகுப்பு, அய்.டி.அய்., முடித்தவர்கள் (என்ஜினீயரிங், டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை) விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்..
வயது வரம்பு: 21-_6_-2024 தேதிப் படி அய்.டி.அய். படித்தவர்கள் 15 வயது நிரம்பியவர்களாகவும், 24 வயது நிரம்பாதவர்களாகவும் இருக்க வேண்டும். அய்.டி.அய். படிக்காதவர்கள் 15 வயது நிரம்பிய வர்களாகவும், 22 வயது நிரம்பாத வர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வும் உண்டு.
தேர்வு செய்யப்படும் விண்ணப் பதாரர்களுக்கு ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை பயிற்சி பணி வழங்கப்படும். ஊதியத்தை பொறுத்தவரை மாதம் ரூ6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். https://pb.icf.gov.in. என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு முறை: விண்ணப்ப தாரர்கள் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அதா வது மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண் ணப்பிக்க வரும் 21-6-2024- கடைசி நாள். விண்ணப்பதாரர்கள் தேர் வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்துக் கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க லீttஜீs://ஜீதீ.வீநீயீ.ரீஷீஸ்.வீஸீ/ணீநீt/ஸீஷீtவீயீவீநீணீtவீஷீஸீ.ஜீபீயீ என்பதை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment