இந்நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

இந்நாள்

மதுரைக் கறுப்புச் சட்டைப் படை மாநில மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்ட நாள் (11..5.1946) அப்பொழுது தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
மதுரையைப் போல் இன்னும் பல தொல்லைகளை நாம் அனுபவிக்க நேரிடும். அந்த அனுபவத்தின் மூலம் தான் நாம் மனிதத் தன்மை பெற்று திரா விடத்தைப் பெறப் போகிறோம். ஆகவே நாம் செய்ய வேண்டியது – யாவரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டும். எங்கும் கறுப்புக் கொடி பறக்க வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும் உடையிலும் கறுப்புக்கொடி சின்னம் துலங்க வேண்டும்.
இந்தக் காரியம் தான் நாம் மதுரையைக் கண்டு பயந்தோமா, துணிவும் வீரமும் கொண்டோமா என்பதை உறுதிப்படுத்தும்.

– – – – –

புலவர் குழந்தையின் இராவண காவியம் தடை நீக்கம் நாள்
இராவண காவியம் சென்னை மாநில ஆட்சியால் 2.6.1948 அன்று தடை செய்யப் பட்டது. 1971ஆம் ஆண்டு மே 11 அன்று முத்தமிழர் அறிஞர் கலைஞர் தலைமை யிலான ஆட்சியால் தடை நீக்கப்பட்டது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிறப்பு பாயிரம்
“பாவண மல்குமி ராவண காவியம் ”
நாவண மல்கிய நல்லா சிரியனும்,
நல்மலி ஓல வலசுவாழ் முத்துச்
சாமிசின் னம்மை காமுறு செல்வ
மைந்தனும், ஆய செந்தமிழ்க் குழந்தை
செப்பினான்; அறிவுல கொப்பு மாறே!
இராவண காவியம் எனுமிது தமிழகத்
திராவிடம் இலையெனத் திராவிடர் புரிக,
ஆக்கியோன் குழந்தையும், போக்கறு பனுவலும்
ஆழிசூ ழுலகில் என்றும்
வாழிய நன்றே வாழிய நன்றே.

– பாரதிதாசன்

No comments:

Post a Comment