சென்னை, மே 12- வேளாண்துறை வளர்ச்சிக்கு விவசாயி களின் தேவைக்கான வாகனங்களை தயாரித்து வழங்கி வரும் சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் 2025ஆம் நிதி ஆண்டிலும் தனது பயணத்தை வலுவான தளத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் 11,656 டிராக்டர்களை ஒட்டுமொத்தமாக ஏப்ர லில் விற்பனை செய்து ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை எட்டி வருவதோடு 2024ஆம் நிதி ஆண்டில் அதிகமான வளர்ச்சியை தனது அயராத முயற்சியால் எட்டியுள்ளது.
ஹோசியார்பூரில் உள்ள சோனாலிகாவின் நம்பர் 1 டிராக்டர் தயாரிப்பு ஆலையில் இருந்து வெளிவரும் ஒவ் வொரு புதுமையான டிராக்டரும் விவசாயிகளுக்கு உற்பத்தித் திறன் மற்றும் லாபத்தை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.
இது குறித்து இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் ரமன் மிட்டல் கூறுகையில், “2025ஆம் நிதி ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளோம், அதன் தொடக்கமாக ஏப்ரல் மாதத்தில் 11,656 டிராக்டர்களை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்துள்ளோம். இது கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தை விட சந்தையில் எங்களது பங்களிப்பு அதிகரித்துள்ளது. எங்களது மேம்பட்ட ஹெவி டூட்டி டிராக்டர் சீரிஸ் விவசாயிகள் மத் தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகம் முழு வதும் இது புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 15 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் எங்களுடன் இணைந்துள்ளதை பெருமையாகக் கருதுகிறோம்.
மேலும் எல் நினோ பாதிப்பு தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக வழக்கத்துக்கு அதிகமாகவே பருவமழை இந்த ஆண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. விரைவிலேயே தண்ணீர் தேக்கங்கள் நிரம்பி, இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment