பல அயல்நாட்டு ஒளிப்படக் கண்காட்சி களில் பரிசு பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஒளிப் படத்தைத்தான் ‘விடுதலை’ வாசகர்களான நீங்கள் அனைவரும் இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் படம் சொல்லும் கதை என்ன?
1972ஆம் ஆண்டில் வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த காலக்கட்டம். வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாமும் பயங்கரமாக மோதிக் கொண்டிருந்த சமயத் தில் அமெரிக்கா மூக்கை நுழைத்து வியட்நாம் போரில் நேரிடையாகக் குதித்தது. குண்டு மழை பொழிய ஆரம்பித்தது. வடக்கு வியட்நாமில் ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்றுக் குவித்து அமெரிக்க ராணுவம்.
1972 மார்ச் மாதம் அமெரிக்க விமானம் எறிந்த நெய்பாம் (Napalm) குண்டு ஒன்றால் ஒரு கிராமமே தீப்பற்றி எரிய, அதில் தன் தாய், தந்தை, சொந்த பந்தங்கள் என்று எல்லோரையும் தீயில் கருக விட்டுவிட்டு தப்பி ஓடிவந்த ஒரு நிர்வாணச் சிறுமியின் அழுகை அத்தனை பேர் மனங்களையும் பிசைந்து எடுத்தது. அந்தச் சிறுமியின் பெயர் கிம்புக் (Kim Phnc).
போர்களின் பயங்கரம் என்ற தலைப்பில் பல உலக நாடுகளில் நடைபெற்ற ஒளிப் படக் கண்காட்சிகளில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசை வென்றுள்ள படம் இது.
நெய்பாம் (Napalm) என்பது வெடிகுண்டுகளில் சேர்க்கப்படும் ஒரு வகையான அய்ட்ரோ கார்பன் கலவையாம். ஒரு ஊரையே அழிக்கக் கூடிய அளவுக்கு இதனால் தீ பரவுமாம்.
போர்கள் இங்கே இல்லாததால் நாம் அமைதியை அனுபவித்துக் கொண்டு ஜாலியாக இருக்கிறோம், ஏழாந்தர டி.வி. சீரியல்களையும் அய்பிஎல் கிரிக்கெட் போட்டிகளையும் பார்த்துக் கொண்டு, போர்கள் மூண்டால் என்ன ஆகும். மனித இனம் என்பது இளைய தலைமுறையினருக்குப் புரிய வேண்டும். ரஷ்யா – உக்ரைன் போராலும் இஸ்ரேல் – பாலஸ்தீனப் போராலும் ஏற்பட்டுள்ள அழிவுகளைப் பார்க்கும்போது – “போர்கள் இனி வேண்டாம்! உலகில் என்றென்றும் அமைதி நிலவட்டும்” என்று உரத்த குரலில் கூறத் தோன்றவில்லையா?
No comments:
Post a Comment