வெயில் கொடுமையை ஓட்டுநர்கள் சமாளிக்க பேருந்துகளில் மின்விசிறி பொருத்தும் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 14, 2024

வெயில் கொடுமையை ஓட்டுநர்கள் சமாளிக்க பேருந்துகளில் மின்விசிறி பொருத்தும் பணி

featured image

சென்னை, மே14-கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் இருக்கையில் மின்விசிறி அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட் டுநர், நடத்துநர்கள் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணி புரிகின்றனர்.

தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இத னால் போக்குவரத்து ஊழியர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள் கின்றனர். இந்நிலையில், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட் டோருக்கு ஓஆர்எஸ் கரைசல் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

இதேபோல் அனைத்து பணி மனை, பேருந்து நிலையங்களில் குடிநீர் வசதியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல் கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, பேருந்து ஓட்டுநர் இருக்கையின் மேல்புறத் தில் மின்விசிறி அமைக்கும் நட வடிக்கையையும் மாநகர போக்கு வரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

அனைத்து பேருந்துகளிலும்.. இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது:

பேருந்து ஓட்டுநர்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாது காக்கும் வகையில் முதல்கட்டமாக சுமார் 1,000 பேருந்துகளில் மின்விசிறி அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 250-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பேருந்துக ளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment