உ.பி.யில் அதிரடி பிஜேபிக்கு வாக்கு இல்லை தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் சபதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

உ.பி.யில் அதிரடி பிஜேபிக்கு வாக்கு இல்லை தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் சபதம்

லக்னோ,மே 11– உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் ராஜ்­புத் சமூக மக்­க­ளைத் தொடர்ந்து பாஜ­க­வுக்கு வாக்­க­ளிக்க மாட்­டோம் என்று தாழ்த்தப்பட்ட சமூக மக்­க­ளும் உறு­தி­மொழி ஏற்­றுக்­கொண்­டுள்­ள­னர்.
நாட்­டின் வளர்ச்­சிக்­கும், மக்­க­ளின் பொரு­ளா­தா­ரத்தை உயர்த்­து­வ­தற்­கும் நட­வ­டிக்கை எடுக்­கா­மல், செல்­வந்த நண்­பர்­க­ளுக்­காக கடந்த 10 ஆண்­டு­க­ளாக ஆட்­சியை நடத்தி வந்த பாஜக மீது நாடு முழு­வ­தும் உள்ள மக்­கள் கடும் அதி­ருப்­தி­யில் உள்­ள­னர். இதற்­கி­டையே ராஜ்­புத் சமூ­கம் தொடர்­பான ஒன்­றிய அமைச்­சர் பர்­ஷோத்­தம் ரூபா­லா­வின் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­திற்கு எதிர்ப்­புத் தெரி­வித்து, குஜ­ராத், அரி­யானா, உத்­த­ரப்­பி­ர­தே­சம் உள்­ளிட்ட மாநி­லங்­க­ளில் போராட்­டத்­தில் ஈடு­பட்ட ராஜ்­புத் சமூக மக்­கள், பாஜ­க­விற்கு வாக்­க­ளிக்கப் போவ­தில்லை என உறுதி மொழி எடுத்­துக் கொண்­ட­னர்.
இதே­போல் உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் லக்னோ அருகே உள்ள பற்­பாங்­கர் பகு­தி­யைச் சேர்ந்த தாழ்த் தப்பட்ட சமூக மக்கள் பாஜ­க­வுக்கு வாக்­க­ளிக்க மாட்­டோம் எனக் கூறி, அர­சி­யல் சாச­னத்­தின் மீது உறு­தி­மொழி எடுத்­துக் கொண்­டுள்­ள­னர். அர­சி­யல் சாச­னத்தை திருத்த எதிர்ப்­புத் தெரி­வித்­தும், தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மீதான பாஜக அர­சின் விரோத போக்­கிற்கு கண்­ட­னம் தெரி­வித்­தும் இந்த முடிவை அவர்­கள் எடுத்­துள்­ள­னர்.

No comments:

Post a Comment