கொல்கத்தா, மே.14– இது உங்கள் உத்தரப்பிரதேசம் அல்ல. மேற்கு வங்காள பெண்களின் கண்ணியத் துடன் விளையாடாதீர்கள் என்று பிரதமர் மோடிக்கு மம்தா எச் சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் அல்ல
மேற்கு வங்காள மாநிலத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, “”சந்தேஷ்காலி பாலியல் நிகழ்வு குற்றவாளிகளை பாதுகாக்க அங்கு பாதிக்கப்பட்ட பெண்களை திரி ணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் மிரட்டி வருகின்றனர்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அதற்குமேற்கு வங்காள மாநில முதலமைச்சர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரு மான மம்தா பதில் அளித்துள்ளார். பாங்கான் நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசி யதாவது:- மேற்கு வங்காளத்தில் உள்ள நிலவரம், பா. ஜனதா ஆளும் மாநி லங்களில் உள்ளதைபோன்றது அல்ல என்பதை பிரதமர் மோடி மனதில் கொள்ள வேண்டும். இது உங்கள் உத்தரப்பிரதேசமோ, மத் தியப் பிரதேசமோ அல்ல.
சுயமரியாதை
மேற்கு வங்காளத்து பெண்கள் சுயமரியாதையுடனும், கண்ணியத் துடனும் வாழ்ந்து வருகிறார்கள். எங்கள் பெண்களை தொடா தீர்கள். அவர்களின் சுயமரியாதை யுடனும், கண்ணியத்துடனும் விளையாடாதீர்கள்.
மேற்கு வங்காளத்தில் குடி யுரிமை திருத்த சட்டத்தையோ, தேசிய குடிமக்கள் பதிவேட் டையோ அமல்படுத்த விடமாட் டேன். ஆனால், குடியுரிமை திருத்த சட்டம், மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தப்படும் என்று பிரத மர் மோடி கூறியுள்ளார். அது எனக்கு புரியவில்லை.
300 தொகுதிகளில் வெற்றி
எந்த நிபந்தனையும் இல்லாமல் யாராவது விண்ணப்பிக்க அனும திக்கப்பட்டால், எங்களுக்கு ஆட் சேபனை இல்லை. தேசிய குடி மக்கள் பதிவேட்டையோ, பொது சிவில் சட்டத்தையோ அமல்படுத்த முடியுமா என்று சவால் விடு கிறேன்.
தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். ஆனால், மேற்கு வங் காளத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். பெண்களுக் கான மாநில அரசின் நிதியுதவி திட்டங்களை தடுத்து நிறுத்த பா.ஜனதா சதி செய்து வருகிறது.
-இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment