லண்டன், மே.27- லண்டனில் தமிழ்நாடு அரசு அயலக தமிழர் நலவா ரியம் சார்பாக, சமூக ஆர்வலர் முருகேசன் தலைமையில் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடை பெற்றது.
வினோத் பாஸ் வரவேற்புரை நிகழ்த்திய நிகழ்வில் அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனா பதி மற்றும் வாரிய அய் ரோப்பிய உறுப்பினர் முஹம்மது ஃபைசல் ஆகி யோர் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரான வழிகாட்டலில் எப்படி எல்லாம் வாரியம் செயல் படுகிறது என்பதை எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்கள். ஆங்கி லேயர் மைக்கேல் ஜென் னிங்ஸ், கலைமாமணி திவ்யகஸ்தூரி, வழக்குரை ஞர் பிரதாப் கிரி, மற்றும் வழக்குரைஞர் ராமச்சந் திரன் ஆகியோர் தமிழ் மாணவர்கள் மத்தியில் வாழ்க்கையில் முன்னே றுவது எப்படி என்றும், பெண்ணியத்தின் கண் ணியம், தன்னிகரில்லா தமிழக முதல்வரின் ஆட் சியில் “தலைத்தோங்கிய தமிழகம்” என்ற தலைப் பில் முறையே உரையாற்றினார்கள்.
லண்டன் ஈஸ்ட்ஹாம் கவுன்சிலர்கள் திருமதி. லக்மினி ஷா, திருமதி. சூசான் மாஸ்டர், லூயிஸ் கோட்ஃப்ரி, ஆகியோர் கலந்து கொண்டு தமிழர் களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்வதாக உறுதி அளித் தார்கள். ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் குணா முத்து சாமி, பட்டுகோட்டை பிரேம் நன்றியுரை நிகழ்த்தினர்.
No comments:
Post a Comment