காஞ்சிபுரம், மே 11 தமிழ்நாட்டு மக்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிதும் காரணமான, திராவிட இயக் கங்களின் தோற்றுவாய் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, திராவிட இன விடுதலைக்காக தந்தை பெரியார் அவர்களால் தொடங் கப்பட்ட குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா ஆகியவற்றைக் கொண்டாடும் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் காந்தி சாலை, தந்தை பெரியார் நினைவுத்தூண் அருகில் 7.5.2024 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளர் கி.இளையவேள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தோழர் காஞ்சி உலகஒளி பெரியார் குறித்து பாடலைப் பாடினார்.
காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார்.
மாவட்ட மகளிர் பாசறை அ.ரேவதி, காஞ்சி மாநகர கழகத் தலைவர் ந. சிதம் பரநாதன், காஞ்சி மாநகர கழகச் செயலாளர் ச. வேலாயுதம், வாலாஜாபாத் ஒன்றிய கழக அமைப்பாளர் எஸ். செல்வம், காஞ்சி மாநகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தே. பிரபா கரன், மாநகர பகுத்தறிவாளர் கழகச் செய லாளர் பெ. சின்னத்தம்பி, அறிவு வளர்ச்சி மன்ற அமைப்பாளர் நாத்திகம் நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னிலை வகித்தோர் சார்பில், அறிவு வளர்ச்சி மன்றத்தின் அமைப்பாளரும் திரா விட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழகச் சொற்பொழிவாளருமான நாத்திகம் நாகராசன் உரையாற்றினார்.
தமிழ் உரிமை கூட்டமைப்பின் காஞ்சி அமுதன், தி.இ.த பேரவை ஜெ. சாரதா தேவி, புதிய பாசறை து.ரா.பாரதி விஜயன், தன் னாட்சி தமிழகம் பெ.பழனி, தமுஎகச கு.ஆறு முகம், திமுக தலைமை கழகச் சொற்பொழி வாளர் கு.அருளானந்தம், திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் பு. எல்லப்பன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப் பாளரும் திராவிடர் கழகச் சொற்பொழிவாள ருமான முனைவர் பா.கதிரவன் தொடக்க உரையாற்றினார்.
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திராவிட முன் னேற்றக் கழகத்தின் மாநில மாணவர் அணி செயலாளருமான வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசன், திராவிடர் கழக கிராம பிரச்சாரக்குழுத் தலைவர் முனைவர் அதிரடி க. அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், குடிஅரசு இதழ் தொடக்கம் – நீதிக்கட்சி – திராவிடர் கழகம் – திமுக – திராவிட ஆட்சியின் செயல்பாடுகள், பெரியார், காமராசர், அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் செயல்பாடுகள், சுயமரியாதை திருமணச் சட்டம், கல்வி வளர்ச்சி, இட ஒதுக்கீடு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சமூகநீதிப் பணிகள் முதலியவை குறித்து உரையாற்றினர்.
மாவட்ட திராவிடர் கழக இணை செயலாளர் சீத்தாவரம் ஆ. மோகன் நன்றி கூறினார்.
‘அறிவுவழி காணொலி இயக்குநர் அரும்பாக்கம் தாமோ தரன் நேரலையில் கூட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார். கரோனா காலத்திலிருந்து காணொலி வழியாகக் கொள்கை பரப்பும் அவரைப் பாராட்டி மாவட்டக் கழகத் தலைவர்
ரூ.2000/- ரூபாய் அளித்து ஊக்கப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர பகுதி செயலாளர்கள் கே. திலகர், ஆ. தசரதன், சு. வெங்கடேசன், மதிமுக எஸ். மகேஷ், திருக்குறள் பேரவை குறள் அமிழ்தன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஜே. ஆர். ராஜேந்திரன், தமுஎகச தாமோதரன், கல்பனா காபி குடில் மகேந்திரன், திமுக சங்கர் கணேஷ், பகுத்தறிவாளர்கள் கழகத் தோழர் பல்லவர் மேடு க. சேகர், பகுத்தறிவாளர் கழகத் தோழர் ரத்தின பச்சையப்பன், சுங்குவார்சத்திரம் கழக அமைப்பாளர் கோ. நடராஜன், வழக்குரைஞர் ராஜா உள்ளிட்ட தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment