கல்லக்குறிச்சி மாவட்டம் த. பெரியசாமியின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் படத்தை திறந்து வைத்து உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 14, 2024

கல்லக்குறிச்சி மாவட்டம் த. பெரியசாமியின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் படத்தை திறந்து வைத்து உரை

featured image

கல்லக்குறிச்சி, மே 14- கல்லக்குறிச்சி மாவட்டம் பெரியார் பெருந்தொண்டரும், கழகப் பொதுக்குழு உறுப்பினரும், தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற வருமான த. பெரியசாமி அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சிறப்பாக 12.05.2024 அன்று காலை 10.30 மணிக்கு பெரியசாமி அவர் களின் இல்லத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கலந்துகொண்டு படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
இந்நிகழ்விற்கு மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமை வகித்தார். பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருச்சி, முதுகலை ஆசிரியர் பெ.கவுதமன் வரவேற்புரையாற்றினார்.

மாநில மருத்துவர் அணிச் செயலாளர் மருத்து வர் கோ.சா.குமார், கல்லக்குறிச்சி மாவட்ட கழகச் செயலாளர் ச.சுந்தரராசன், மாவட்ட மகளிர் அணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன், மாவட்ட கழகத் துணைத் தலைவர் குழ.செல்வ ராசு, எடுத்தவாய்நத்தம் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் பெ. கோவிந்தராசு பைத்தந்துறை அரிசி ஆலை உரிமையாளர் ந.ராமசாமி, கரடிசித்தூர் நிலக்கிழார் தொ.தேவராசு, மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் மதிமுக மாதவன், கல்லக்குறிச்சி மாவட்ட ஓய்வூதியர் சங்க செயலா ளர் பொன். அறிவழகன், கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வீர.முரு கேசன்; அமைப்பாளர் சி.முருகன், மாவட்ட கழக இளைஞர் அணித் தலைவர் அ.கரிகாலன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணித் தலைவர் கோ.வேல்முருகன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய கழகத் தலைவர் செல்வ சக்திவேல் மாவட்ட கழக துணைச் செயலாளர் பா. முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கழக காப்பாளர் ம.சுப்பராயன் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.

சுயமரியாதைச் சுடரொளி த.பெரியசாமி படத்தை திறந்து வைத்து கழகப் பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார். அவர் தமது உரையில் பெரிய சாமி அவர்கள், தனது 20 வயதிலிருந்து கழகப் பொருளாளராக இருந்த, சுயமரியாதைச் சுடரொளி கோ சாமிதுரை; வாசு ஆகியோர்களு டன் சேர்ந்து பெரியாரின் பகுத்தறிவு கருத்து களை பிரச்சாரம் செய்தவர். கழக மாநாடுகள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், பிரச் சாரப் பணிகள், கழக தோழர்களின் இல்ல நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் தவறா மல் கலந்து கொண்டவர். தனது குடும்பத்தை சுயமரியாதைக் குடும்பமாக வைத்திருந்தவர் .அவரின் வாரிசுகளான பெ.கவுதமன், பெ.எழில ரசன், பெரியார் செல்வன், பெ.தம்பிதுரை அனை வரையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்த தோடு, கழகப் பணிகளை செய்ய வைத்தவர். அவர் செய்த பணிகளை தொடர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.பெரிய சாமி அவர்கள் தலைமைக் கழகம் அனுப்பும் எல்லா கடிதங்களுக்குரிய கூட்டங்களில் தவறா மல் கலந்து கொண்டவர். பெரியசாமி அவர்கள் தன் இறுதிகாலம் வரையிலும் கழகப் பணிகளைச் செய்து கொண்டே இருந்தவர்.

அண்மையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பெரம்பலூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பயணத்தின் போது, தன்னைச் சந்தித்த பெரியசாமி அவர்களிடம் நலம் விசாரித்து உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். அந்த அளவுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பெரியசாமி மீது பற்றுள்ளவராக இருந்தார். அவரின் இழப்பு என்பது அவர் குடும்பத்துக்கு மட்டுமல்ல; கழகத்திற்கும், கல்லக் குறிச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர் களுக்கும் மிகப்பெரிய இழப்புதான். எனினும், இதையெல்லாம் தாங்கிக் கொண்டு பெரியாரின் சுயமரியாதை இயக்க, சமூக நீதிக் கொள்கைகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழி காட்டுதல்படி, நடப்போம் என்றும் பெரியசாமி அய்யா வாழ்க! அவரின் தொண்டு இன்னும் பல ஆண்டுகள் நினைவில் இருக்கும் என்றும் கூறி தனது உரையை முடித்தார்.

தா.உதயசூரியன் நினைவேந்தல் உரை
சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்
தா.உதயசூரியன், பெரியசாமி அவர்கள்தான் பெரி தும் மதித்து போற்றியதாகவும், அவரின் இணை யர் முத்தாலம்மாள் மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் வரை அனைவரும் கழகக் கொள்கை குடும்பமாகவும் வாழ்ந்து வருவதையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். எங்களுடைய குடும்பமும் தந்தை பெரியாரின் கொள்கைகளை கடைப்பிடித்து வரும் குடும்பமாகும். நான் முதன்முதலில் சின்னசேலம் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் 1989ஆம் ஆண்டில் போட்டியிட்டேன், அப் போது இப்பகுதியில் மாவட்ட வருவாய் அலு வலராக பணிபுரிந்த சு.அறிவுக்கரசு அவர்கள் அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் இருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று முதன் முதலில் சின்னசேலம் சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்தில் நுழைந்தேன்.

ஆகையால் அறி வுக்கரசு அவர்களை என்னால் மறக்க முடியாது. அதன் பின் 2006-2011 காலத்தில் மீண்டும் சின்னசேலம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டேன். தற்போது, 2016 முதல் தொடர்ந்து இன்று வரை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன். நான் கழகத் தலைவர் – தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் மேல் மாறாத பற்று கொண்டிருக்கிறேன். இப்போது கழக பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்கள், பெரியசாமி அவர்களின் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை ஆற்றியுள்ளார். இதன் மூலம் கழகப் பணிகளைச் செய்த பெரியாரின் பெருந்தொண் டர் த.பெரிய சாமி அவர்களுக்கு கழகம் தனது அன்பினை – பாராட்டினை – புகழினை தெரிவித்துள்ளதை பார்த்து மகிழ்கின்றேன். பெரிய சாமி அவர்களின் குடும்பம் பெரியாரின் கொள் கைகளுடன் வளமாக வாழ்க வேண்டும் என வாழ்த்தி முடித்தார்.

ஆ.வந்தியத்தேவன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தின் கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத்தேவன் நினைவேந்தல் உரையாற்றி னார். அவர் தனது உரையில் பெரியசாமி அவர்கள், என்னுடைய நீண்ட நாள் நண்பர். கழகப் பொருளாளராக இருந்த கோ.சாமிதுரை அவர்களை கல்லக்குறிச்சியில் பார்க்க வரும் போதெல்லாம் செய்தி அறிந்து வந்து விடுவார். அவருடன் பேசி மகிழ்வேன். நான் கழகப் பொரு ளாளரிடம் பேசிவிட்டு புறப்படும் வரையில் உடனிருந்து என்னை வழியனுப்பி விட்டு தான் வீட்டிற்குச் செல்வார்.

அவரின் இயக்கப் பணிகளை நான் ஆரம்ப காலந்தொட்டு அறிவேன். அவரின் மீதுள்ள மாறாப்பற்றினால் அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். அவரின் மகன்கள், உறவினர் களுக்கும் தோழர்களுக்கும் கழகம் உறுதுணையாய் இருப்பது போல மறுமலர்ச்சி முன்னேற்ற கழகமும் உற்ற துணையாய் விளங்கும். பெரியசாமி அய்யாவின் புகழ் என் றென்றும் நிலைத்து நிற்கும் எனக் கூறி அவரது உற்றார், உறவினர்கள், பேரப்பிள்ளைகள் கழகத் தோழர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் புகழ் வணக்கத்தையும் கூறி முடித்தார்.
அவரைத் தொடர்ந்து எடுத்துவாய்நத்தம் மேனாள் ஒன்றிய திமுக செயலாளர் க.நடராசன், உளுந்தூர்பேட்டை மருத்துவர் மா.அன்புமணி, ஆத்தூர் மாவட்ட பொறுப்பாளர் த.வானவில் கல்லக்குறிச்சி மாவட்ட கழக இலக்கிய அணித் தலைவர் பெ.சயராமன்,அரசு போக்கு வரத்து கழகம்-நாகராசன், கவிஞர் மறத்தமிழன் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.

விடுதலை சந்தாக்கள் அளிப்பு:
பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர் களிடம் மாநில மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார் பத்து விடுதலை சந்தாக்களையும், பெரியசாமி அவர்களின் நினைவாக அவரின் குடும்பத்தினர் 5 விடுதலை சந்தாக்களையும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சி யில் கல்லை நகர கழகத் தலைவர் இரா.முத்துசாமி; செயலாளர் நா.பெரியார், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கே. முத்துவேல் ,சங்கராபுரம் ஒன்றிய கழகத் தலைவர் பெ. பாலசண்முகம், ரிஷிவந்தியம் ஒன்றிய கழகத் தலைவர் அர.சண்முகம் கல்லக்குறிச்சி மாவட்ட ஓய்வூதியர் சங்க செயலாளர் பொன்.அறி வழகன், சங்கராபுரம் ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் மா.ஏழுமலை, மாத்தூர் கிளை கழகத் தலைவர் அ.ச.துரைராஜ், மூரார் பாளை யம் கிளைக் கழகத் தலைவர் இரா செல்வமணி, சங்கராபுரம் நகர கழகத் தலைவர் கலை. அன்பரசு, மேலூர் பழனிமுத்து, உதவி கல்வி அலுவலர் ஓய்வு பா.ஜெகதீசன், சவுந்திரவல்லி பாளையம் அண்ணா அறிவுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ. எழிலரசன் நன்றி கூற நினைவேந்தல் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment