சுயமரியாதை இயக்கம் செய்த மாற்றங்கள் எவை? செம்பியத்தில் நடந்த சுயமரியாதை இயக்க 'குடிஅரசு' நூற்றாண்டு விழாவில் விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 10, 2024

சுயமரியாதை இயக்கம் செய்த மாற்றங்கள் எவை? செம்பியத்தில் நடந்த சுயமரியாதை இயக்க 'குடிஅரசு' நூற்றாண்டு விழாவில் விளக்கம்

பெரம்பூர், மே 10- வடசென்னை மாவட்டம், பெரம்பூர் – செம் பியம் பகுதிக் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்கம் – ‘குடி அரசு’ நூற்றாண்டு விழா கழக பரப்புரைக் கூட்டம் 5.5.2024 அன்று மாலை 6:30 மணிக்கு செம்பியம் இராகவன் தெரு வில் சிறப்பாக நடைபெற்றது.
வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம் அனைவரையும் வரவேற்று, தலைமை வகித்துப் பேசினார்.
தலைமைக் கழக அமைப்பா ளர் தே.செ.கோபால், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் சி.பாசுகர், கொடுங்கையூர் பகுதி கழக தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் பகுதி கழக தலைவர் ப.கோபாலகிருஷ்ணன், கொளத்தூர் ச.இராசேந்திரன், அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தள பதி பாண்டியன் விழாவைத் தொடங்கி வைத்து உரையாற் றினார்.
மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், கழக துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி ஆகியோரது உரை நிகழ்வுக்குப் பிறகு நிறை வாக கழக கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன் சிறப்பு ரையாற்றினார்.

தந்தை பெரியார் சுயமரி யாதை இயக்கத்தை தோற்று விப்பதற்கு முன்பு இருந்த சமூக கேடுகள், அவரது கருத்துப் பிரச்சாரத்தால் களையப்பட்டு, சமுதாயத்தில் ஏற்பட்ட மாற் றத்தையும், ‘குடிஅரசு’ ஏட்டின் மூலமாக மக்களிடையே எத்த கைய விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது என்பதையும், இவற்றின் அடிப்படையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டா லின் நடத்துகின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியானது நடை முறைப்படுத்தி வருகின்ற திட் டங்களையும், அத்தகைய ஆட்சி பாதுகாக்கப்பட வேண் டிய அவசியம் அறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அயராது ஆற்றி வருகின்ற அரும் பணிகளை விளக்கியும் முனைவர் அதிரடி க.அன்பழ கன் சிறப்பானதொரு உரை யாற்றினார்.

முனைவர் அதிரடி க.அன் பழகனுக்கு ப.கோபாலகிருட்டி ணனும், ச.இன்பக்கனிக்கு தங்க.தனலட்சுமியும் பயனாடை அணிவித்தனர்.

இக்கூட்டத்தில், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, கண்ண தாசன் நகர் கழக தலைவர் கு.ஜீவா, அமைப்பாளர் க. துரை, அயன்புரம் கழக தலைவர் சு.துரைராசு, எருக்க மாநகர் கழக அமைப்பாளர் சொ.அன்பு, முத்தமிழ் நகர் கழக அமைப்பாளர் வி.இரவிக் குமார், மங்களபுரம் கழக அமைப்பாளர் மா.டில்லிபாபு, ‘பாசறைமுரசு’ இதழாசிரியர் பாசறை மு.பாலன், 67ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் கே.ஜார்ஜ்குமார், பொரு ளாளர், கே.ஜனார்த்தனன், அ.சு.கவின், க.சங்கர், ச.ஜெயக் குமார், க.செல்வம், வ.அருள் மற்றும் ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும் வந்து கலந்து கொண்டனர்.

செம்பியம் பேப்பர் மில்ஸ் சாலை, பொதுக்கூட்டம் நடை பெற்ற இராகவன் தெரு ஆகிய இடங்களில் கழகக் கொடிகள் கட்டப்பட்டு, பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன. பெரம் பூர் பகுதி கழகத் தலைவர் மங்கள புரம் ஆ.பாசுகர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment