கச்சத் தீவுப் பிரச்சினை: தகவல் அறியும் உரிமைச் சட்டம் சொல்லாததைத் திரித்துக் கூறும் அண்ணாமலை - முகத்திரையைக் கிழிக்கிறார் பி.வில்சன் எம்.பி. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

கச்சத் தீவுப் பிரச்சினை: தகவல் அறியும் உரிமைச் சட்டம் சொல்லாததைத் திரித்துக் கூறும் அண்ணாமலை - முகத்திரையைக் கிழிக்கிறார் பி.வில்சன் எம்.பி.

featured image

சென்னை, மே 11- கச்சத்தீவு விவகாரத் தில் திமுகவை சரமாரி விமர்சித்திருக்கும் தமிழ்நாடு பாஜக அண்ணாமலைக்கு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் சில கேள்விகளை முன் வைத் திருக்கிறார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்த லுக்கு முன்பு கச்சத்தீவு குறித்து, தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.
அப்போது அவர் சொன்னபோது:

கச்சத்தீவு

“கடந்த, 1961 இல் அப்போதைய பிர தமர் நேரு, குட்டித் தீவான கச்சத்தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை, அதன் உரி மையை இலங்கைக்கு விட்டுத் தர தயா ராக இருந்தார்.. இலங்கை தலைநகர் கொழும்பில், 1973 இல் நடந்த வெளி யுறவு துறை அதிகாரிகளின் கூட்டத்தில், கச்சத்தீவை இலங்கைக்கு தர முடிவெடுக் கப்பட்டது.

அதற்கு மறுஆண்டில், அப்போதைய முதலமைச்சர் கலைஞரிடம் தெரிவிக் கப்பட்டு, உடனடியாக ஒப்புதல் பெறப் பட்டது. கலைஞருக்குத் தெரிந்தே கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

1974 இல் கலைஞரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் சந்தித்து பேசிய குறிப்புகள், தற்போதைய ஆர்.டி.அய்., தகவல்கள் வாயிலாக வெளிவந்துள்ளன. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரசை மட்டுமே தி.மு.க., குறை சொல்லி வந் தது. உண்மையில், கச்சத்தீவு இலங்கைக் குத் தாரை வார்க்கப்பட்டதில், தி.மு.க.,வுக் கும் முழு பங்கு உண்டு” என்று அண்ணா மலை கூறியிருந்தார். அதுமட்டுமல்ல, ஆர்டிஅய் ஆவணத்தை பச்சைப் பொய் என்று சொல்பவர்கள் என்னுடன் விவா திக்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், திமுக மாநிலங்க ளவை உறுப்பினர் பி. வில்சன் தன்னுடைய ‘எக்ஸ்’ தள பதிவில் இது தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

பொய் தகவல்:

“கச்சத்தீவு விவகாரம் புனையப் பட் டது. எனக்கு ஆச்சரியமில்லை. அவர்கள் பொய்யான செய்திகளை பரப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். கச்சத்தீவு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண் ணாமலை வெளியிட்ட ஆர்.டி.அய். தக வல் தற்போது உண்மையில்லை என நிரூபணமாகியுள்ளது. 1976 இல் எந்த பகுதியும் இலங்கைக்குக் கொடுக்கப்பட வில்லை என 2015 இல் பிரதமர் மோடி அரசால் வெளியிடப் பட்ட மற்றொரு ஆர்.டி.அய். தகவலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை தெளிவுப்படுத்தி யுள்ளது.

புனையப்பட்ட தகவல்

இது புனையப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமா? என்ற கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது மாதிரி நடத்தை விதிகளை மீறுவதைத் தவிர, அரசாங்கப் பதிவேடுகளை திருத்து தல் மற்றும் பொய்யாக்குதல் போன்ற கிரிமினல் குற்றங்களை ஈர்க்கவில்லையா? இதுபற்றி காவல்துறையில் புகார் பதிவு செய்து இந்தப் பிரச்சினையை முழுமை யாக விசாரிக்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். 2024 நாடாளுமன்ற தேர் தல் வரும் நேரத்தில் மட்டும் நாட்டின் பிரதமரால் கச்சத்தீவு பற்றி கண்டுபிடிக்க முடியும்! இது தேர்தல் பாசாங்குதனம் இல்லையா? 2024 ஜனவரியில் இருந்து மட்டும் எப்படி தமிழ்நாட்டை நினைவு கூர்ந்தார்களோ அதேபோல் தான் கச்சத்தீவு விவகாரத்திலும் நுழைந்து இருக்கிறார்கள்.

கேள்விகள்

கச்சத்தீவை மீட்பதில் பா.ஜக அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந் தால் 2014 முதல் 2024 வரை ஏன் ஒரு சிறு விரலை கூட அசைக்கவில்லை என்று வில்சன் சரமாரியாக பல்வேறு கேள்வி களை எழுப்பி வருகிறார். இதற்கு பாஜக என்ன பதிலடி தரப்போகிறது என்றுதான் தெரியவில்லை.

No comments:

Post a Comment