பா.ஜ.க. ஆட்சிதான்.. ஆனால் மோடிக்கு "நோ!" ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தும் புது தலைகள் யோகி, அமித்ஷா இல்லையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

பா.ஜ.க. ஆட்சிதான்.. ஆனால் மோடிக்கு "நோ!" ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தும் புது தலைகள் யோகி, அமித்ஷா இல்லையா?

featured image

புதுடில்லி, மே 25 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் பான்மை பெறாத பட்சத்தில்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா.ஜ.க. ஆட்சியில் கடுமையான தலையீடு களை செய்யும் என்று அந்த அமைப்பின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 மக்களவைத் தேர்தல் தொடக்கத்தில் 400 இடங்களை பெறுவோம் என்று பாஜக முழக்கம் வைக்க தொடங்கியது. ஆப் கி பார்.. சார்சோ பார் என்று முழக்கம் போட் டது. அதாவது இந்த முறை 400 இடங்களில் வெல்வோம் என்று முழக்கம் போட்டது.
ஆனால், பா.ஜ.க. இப்படி முழக்க மிட்டது கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி உள்ளது. 400 இடங்களை வெல்வோம் என்று அந்த கட்சியின் முழக்கம் முதல் கட்ட தேர்தலில் மிக பலமாக ஒலித் தது. ஆனால் இரண்டமாக கட்டப் பிரச்சாரம் எதிலும்.. மூன்றாம் கட்ட பிரச்சாரத்திலும் அந்த சத்தம் கேட்கவே இல்லை.

உதாரணமாக மோடி கடைசியாக செய்த 15 பிரச்சாரத்திலும் 400 என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. மீண்டும் ஆட்சிக்கு வரு வோம் என்பதை மட்டுமே கூறினார். மாறாக இலக்கு 400 என்பதை அவர் எங்குமே குறிப்பிட்டு கருத்து தெரி விக்கவில்லை.

மக்களவைத் தேர்தலில் கடந்த கட்ட தேர்தல்கள் மற்றும் நடந்து முடிந்து 4 ஆம் கட்ட தேர்தலின் போதும் நடத்தப்பட்ட, பிரச்சாரத்தில் பாஜக 400 இலக்கு என்பது தொடர் பான சார்சோ பார் முழக்கத்தை எழுப்புவதை நிறுத்தியுள்ளது.
பாஜகவின் 400 இலக்கு அந்த கட்சிக்கே எதிராக திரும்பியது. இட ஒதுக்கீட்டை பாஜக நீக்கும், இறை யாண்மைக்கு எதிராக அரசமைப்புச் சட்டத்தை பாஜக மாற்றும் என்றெல் லாம் மக்கள் இடையே எதிர்ப்பு வந்தது. அதோடு இல்லாமல் எதிர் கட்சிகளுக்கு பலம் இல்லை என்றால் பாஜக நினைத்ததை எல்லாம் செய்யும். அது மக்களுக்கே எதிராக செல்லும் என்று மக்கள் இடையே அச்சம் எழுந்தது.

அதோடு பாஜக 400 இடங்களை வெல்ல வாய்ப்பே இல்லை என்றும் கணிப்புகள் வரத் தொடங்கின. இதன் காரணமாக தற்போது பாஜக 400 இலக்கு என்பதற்கான சார்சோ பார் முழக்கத்தை எழுப்புவதை நிறுத்தியுள்ளது. அதோடு பாஜக தனி யாக ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு இல்லை. பாஜகவின் பெரும்பான்மை 272 அய் தனியாக பெற வாய்ப்பே இல்லை என்று அந்த கட்சிக்கு சில அறிக்கைகள் செல்கின்றன என்று கூறப்படுகிறது.

அதாவது பாஜக தனியாக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. என்டிஏ ஆதரவுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக ஆர்எஸ்எஸ் நம் புகிறதாம். என்டிஏ ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாஜகவிற்குள் பல உள் வேலைகளை பார்க்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ள தாம்.

2024 மக்களவைத்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத பட்சத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பாஜக ஆட்சியில் கடு மையான தலையீடுகளை செய்யும் என்று அந்த அமைப்பின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி மோடிக்கு பதிலாக கருநாடகாவைச் சேர்ந்த பிரகலாத் ஜோஷியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த ஆர்எஸ்எஸ் நினைக் கிறதாம். பிரகலாத ஜோஷி கருநாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் மேனாள் மாநிலத் தலைவரும், 2009, 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் தார்வாடு மக்களவைத் தொகுதிலி ருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களவை உறுப்பினரும் ஆவார்.
இவர் தீவிரமான ஆர்எஸ்எஸ் நிர்வாகி. ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்தவர். பாஜகவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத் தில் இவரை பிரதமராக்க வேண்டும்.. இல்லையென்றால் என்டிஏ கூட்ட ணியை உடைப்போம் என்று ஆர்எஸ்எஸ் வற்புறுத்த திட்டமிட் டுள்ளதாம்.
ஏற்கெனவே குஜராத்தில் பாஜக விற்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் சரி யாக பணிகளை செய்யவில்லை. அப்படி இருக்கவே ஆர்எஸ்எஸ் தரப்பை மகிழ்விக்க மோடி தனது பிரச்சார யுக்தியை மாற்ற தொடங் கினார். உதாரணமாக இஸ்லாமியர் களை தாக்கி கடுமையாக பேசினார். சில மேடைகளில் இஸ்லாமிய இட ஒதுக்கீடு, தாலி பறிப்பு பற்றி எல்லாம் மோடி பேசினார். இதெல்லாம் தேர் தலில் பணிகளை செய்யாத ஆர்எஸ்எஸ் தலைவர்களை உற் சாகப்படுத்த மோடி களமிறங்கிய யுக்தி என்று கூறப்பட்டது.

ஆனால், ஆர்எஸ்எஸ் எதற்கும் தலை அசைக்கவில்லை. பாஜக தேர்தல்களில் வெற்றிபெற முக்கிய காரணம் பாஜக பிரச்சாரம் மற்றும் ஆர்எஸ்எஸ் நடத்தும் லோக்கல் பிரச்சாரம். ஆனால், உத்தரப்பிர தேசத்தில் இந்த முறை பாஜகவிற்கு ஆதரவாக களப்பணிகளை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் செய் யாமல் போக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அந்த கார ணங்களை இங்கே பார்க்கலாம்.

ஆர்எஸ்எஸ் தரப்பு மோடியின் தனிப்பட்ட வளர்ச்சியை விரும்ப வில்லை என்று கூறப்படுகிறது. பாஜகவில் ஆர்எஸ்எஸ் குரல் இல் லாமல் போய்விட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பாஜகவில் எப்போதும் வாய்ஸ் இருக்கும். அது மோடி வரு கையால் இல்லாமல் போய்விட்டது. ஆர்எஸ்எஸ் முடிவுகளை மோடி – அமித் ஷா இருவரும் கேட்பது இல்லை. இருவரும் சுயமான முடி வுகளை எடுக்கின்றனர். இப்போது வேட்பாளர் தேர்வில் கூட ஆர்எஸ்எஸ் குரல் கேட்க இல்லை. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் அப்செட் ஆகி உள்ளது. இது களப் பிரச்சாரத்திலும் சுணக்கம் ஏற்பட காரணம் ஆகி உள்ளதாக கூறப் படுகிறது.

No comments:

Post a Comment