சென்னை,மே14- தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணா மலைக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அனுமதி யளிக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித் துள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் பேசும்போது, மீனாட்சி அம்மன் கோயிலில் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர், அறிஞர் அண்ணா குறித்து பேசி யதை குறிப்பிட்டார்.
ஆனால், அப்போது முத்து ராமலிங்கத் தேவர் அவ்வாறு பேசவில்லை என்று பத்திரி கைகள் தகவல் வெளியிட்டன.
இந்நிலையில், கடந்த பிப்ர வரி மாதம் சேலத்தை சேர்ந்த வி.பியூஷ் என்பவர் அண்ணாமலை, இது போன்ற தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் மோதலை ஏற் படுத்துவதாகவும், அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேலம் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தார். முன்ன தாக அவர், இது குறித்து சேலம் காவல் ஆணையரிடம் புகார் அளித்ததுடன், சேலம் நீதித்துறை நடுவர் மன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். அத்துடன், ஆதா ரங்களையும் சமர்ப்பித்திருந்தார்.
இதையடுத்து, இப்பொருள் குறித்து, சேலம் மாவட்ட ஆட்சி யர் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதினார். இக்கடிதத்தின் அடிப்படையில் கடந்த ஏப். 25ஆம் தேதி தமிழ்நாடு பொதுத் துறை செயலர் கே.நந்தகுமார் அரசாணை ஒன்றை பிறப்பித் தார்.
அதில், அண்ணாமலை மீது குற்ற வழக்கு தொடர அனுமதி யளிக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த அரசாணையின்கீழ், வழக் கம்போல் அரசாணைகளில் இடம்பெறும் ஆளுநரின் ஆணைப்படி என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
இது தவறாக புரிந்து கொள் ளப்பட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைமீது குற்ற வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதியளித்த தாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த தகவலை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு ஆளுநரால் அனுமதி அளித்துள் ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து, ஆளுநர் மாளிகைக்கு கடந்த 2 நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பர பரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், இது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப் பிக்கவில்லை’’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tuesday, May 14, 2024
Home
தமிழ்நாடு
பி.ஜே.பி. அண்ணாமலை மீது வழக்கு! ஆளுநர் அனுமதி அளிக்கவில்லையாம் ஆளுநர் மாளிகை விளக்கம்
பி.ஜே.பி. அண்ணாமலை மீது வழக்கு! ஆளுநர் அனுமதி அளிக்கவில்லையாம் ஆளுநர் மாளிகை விளக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment