தமிழ்நாட்டுக்குத் தரம் குறைந்த நிலக்கரி விற்பனை:
அதானி நிறுவன ஊழல் குறித்து விசாரணை நடத்துவோம்!
ராகுல் காந்தி உறுதி!
புதுடில்லி, மே 23- தமிழ்நாட்டுக்கு தரம் குறைந்த நிலக்கரியை விற்று அதானி நிறுவனம் செய்த ஊழல் குறித்து இந்தியா கூட்டணி ஆட்சியில் விசாரணை நடத் தப்படும் என்று ராகுல்காந்தி தெரிவித் துள்ளார்.
நிலக்கரி ஊழல்
அதானி நிறுவனம் தமிழ்நாட்டுக்கு நிலக்கரி விற்றதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாக பிரபல ஆங்கில பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளி யிட்டுள்ளது.
அதில். கடந்த 2014ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் வாங்கிய தரம் குறைந்த நிலக்கரியை 24 கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோக கழ கத்துக்கு 3 மடங்கு அதிக விலைக்கு அதானி நிறுவனம் விற்றுள்ளது.இது கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை நடைபெற்றுள்ளது.
இதன் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி அள வுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. அதாவது இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரியை ரூ.2,330 கோடிக்கு வாங்கி அதனை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோக கழகத்துக்கு ரூ.7.650 கோடிக்கு விற்றுள்ளது. மேலும் இந்தோனேசியாவி லிருந்து கொண்டுவரப்பட்ட நிலக்கரியின் தரத்தை உயர்த்திக் காட்டவும், விலையை அதிகரித்து காட்டவும் போலி ஆவணங் களையும் தயாரித்துள்ளது அதானி நிறு வனம். இதனால், தமிழ்நாடு அரசுக்கு
ரூ. 6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள தாக அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை நடத்துவோம்!
இதனிடையே காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் தளத்தில் இந்த கட்டுரையை மேற்கோள் காட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
இந்த வெளிப்படையான ஊழலைப் பற்றி அமலாக்கத்துறை, சி.பி.அய். மற்றும் வருமான வரித்துறை அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன் படுத்தப்பட்டன என்பதை பிரதமர் மோடி சொல்வாரா? ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு. இந்த மெகா ஊழலை பற்றி இந்தியா கூட்டணி அரசு விசாரிக்கும். பொதுமக் களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு காட்டுவோம்.
மேற்கண்டவாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
கூட்டுக்குழு விசாரணை
இந்தோனேசியாவிலிருந்து மலிவாக வாங்கிய தரம் குறைந்த சாம்பல் நிலக்கரியை 3 மடங்கு அதிக விலை வைத்து தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்திற்கு விற்று அதானி நிறுவனம் அதிக லாபம் ஈட்டியுள்ளது. இதன் மூலம் சாமானிய மக்கள் சுரண்டப் பட்டுள்ளனர்.
இந்தியாவில் அதானியின் சட்ட விரோத நடவடிக்கை கள் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் முடக்க பிரதமர் உதவியிருக்கலாம். ஆனால், அடுத்த மாதம் இந்தியா கூட்டணி அரசு பதவியேற்கும்போது இவை அனைத்தும் வெளிவரும். இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு மாதத்துக்குள் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படும்.
-இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment