கடவுச்சீட்டை முடக்க கருநாடக அரசு முயற்சி
பெங்களூரு, மே 13- மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி மக்களவை உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண் களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் காட்சிப் பதிவுகள் கடந்த 26ஆம் தேதி வெளியாயின. இதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார்.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டு பணிப் பெண், மஜத மேனாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 3 பெண்கள் அளித்த புகாரின்பேரில் அவர்மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது. இந்த வழக்கில் தேவக வுடாவின் மூத்த மகனும் மஜத சட்டமன்ற உறுப்பினருமான ரேவண்ணா (66) கைது செய் யப்பட்டார்.
ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலை பிடிக்கும் முயற்சியில் சிறப்பு புலனாய்வு பிரிவு காவல் துறையினர் இறங்கியுள்ளனர். அவருக்கு 2 முறை ‘லுக் அவுட்’ அறிவிக்கை விடுத்துள்ள அதிகாரிகள், அவர் வைத்துள்ள தூதரக கடவுச் சீட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் பிரஜ்வல் வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க உதவுமாறு சிபிஅய் இயக்கு நரகத்தின் உதவியை கோரியுள் ளனர். இதையடுத்து சிபிஅய் அதி காரிகள் பிரஜ்வலுக்கு புளூ கார் னர் அறிவிக்கை விடுத்துள்ளனர்.
மக்களவை உறுப்பினர் என்ற முறையில் பிரஜ்வல் ரேவண்ணா, தூதரக கடவுச்சீட்டு வைத்துள் ளார். வெளியுறவு அமைச்சகம் நேரடியாக வழங்கும் இந்த பாஸ் போர்ட் பொதுவாக தூதரக முக்கிய அதிகாரிகள், வெளிநாட் டில் அரசுப் பணி மேற்கொள்வோர், வெளியுறவு துறையின் இணைச் செயலாளர் தகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.
இத்தகைய கடவுச்சீட்டு வைத் திருப்பவர்கள் சில நாடுகளுக்கு விசா இல்லாமலே செல்ல முடியும். அங்கு 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும்.
அதேவேளையில் மோசடி வழக்கில் சிக்கி 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற குற்ற வாளிகளின் தூதரக கடவுச்சீட்டு திரும்பப் பெறப்படும்.
அதேபோல நீதிமன்ற உத்தரவு இல்லாவிட்டாலும் தூதரக கடவுச்சீட்டு முடக்கலாம் என சிறப்பு புலனாய்வு குழு அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment