ரஜ்வால் ரேவண்ணா மீதான வழக்கு: ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒத்துழைக்கவில்லை! கருநாடக அரசு குற்றச்சாட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

ரஜ்வால் ரேவண்ணா மீதான வழக்கு: ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒத்துழைக்கவில்லை! கருநாடக அரசு குற்றச்சாட்டு!

பெங்­க­ளூரு, மே 26– பிரஜ்­வல் ரேவண்ணா மீதான பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­கில் ஒன்­றிய பா.ஜ.க. அரசு ஒத்­து­ழைப்பு அளிக்­க­வில்லை என கரு­நா­டக அரசு குற்­றம் சாட்­டி­யுள்­ளது.
மே­னாள் பிர­த­மர் தேவ­க­வு­டா­வின் பேர­னும், ஹாசன் தொகு­தி­யில் போட்­டி­யி­டும் பா.ஜ.க. கூட்­டணி வேட்­பா­ள­ரு­மான பிரஜ்­வல் ரேவண்ணா பல்­வேறு பெண்­க­ளு­டன் நெருக்­க­மாக இருக்­கும் ஆபாச காட்சிப் பதிவுகள் வெளி­யாகி சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.
பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­கில் தேடப்­ படும் நப­ராக அறி­விக்­கப்­பட்ட பிரஜ்­வல் வெளி­நாடு தப்­பி­விட்­டார்.
பிரஜ்­வ­லின் கடவுச் சீட்டை ரத்து செய்­தால், அவர் நாடு திரும்ப வேண்­டிய கட்­டா­யம் ஏற்­ப­டும்.
ஆனால், ஒன்­றிய பா.ஜ.க. அரசு இது­வரை கடவுச் சீட்டை முடக்­க­வில்லை என்று கரு­நா­டக உள்­துறை அமைச்­சர் பர­மேஸ்­வர் குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.
சிறப்பு புல­ னாய்­வுத் துறை நீதி­மன்­றம் பிறப்­பித்த பிடி­வா­ரண்ட்டை சுட்­ டிக்­காட்டி கடி­தம் எழு­தி­ய­போ­தும், வெளி­யு­ற­வுத்­துறை எந்த பதி­லும் அளிக்­க­வில்லை என்று தெரிவித்­துள்­ளார்.

No comments:

Post a Comment