கல்லக்குறிச்சி, மே 12- 7.5.2024 அன்று மாலை 5.30 மணிக்கு கல்லக் குறிச்சி மாவட் டம் , சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி எதிரில் உள்ள பெரியார் – அம் பேத்கர் வளாகம், சுயமரியா தைச் சுடரொளி, த.பெரியசாமி நினைவுத் திடலில், சுயமரி யாதை இயக்கம் – குடிஅரசு நூற்றாண்டு பரப் புரை கழகப் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கழக காப் பாளர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார்; சங்கரா புரம் ஒன்றிய கழகத்தலைவர் பெ.பாலசண்முகம் வரவேற் புரை ஆற்றினார்; மாநில மருத் துவரணி செயலாளர் மருத்து வர் கோ.சா.குமார்; மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர்; சங்கராபுரம் ஒன்றிய மறு மலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் ஆர்.இலட்சுமி காந்தன், மாவட்ட கழகத் துணைத் தலை வர் குழ. செல்வராசு, மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் அ.கரிகாலன்; சங்கராபுரம் ஒன் றிய கழக செயலாளர் கே.மதி யழகன்; சங்கரா புரம் ஒன்றிய மாண வர் கழக அமைப்பாளர் மா. ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
கழக துணைப் பொதுச் செயலாளரும், வழக்குரைஞருமான ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றி னார். அவர் தனது சொற் பொழிவில், தந்தை பெரியார் காந்தியாரின் கொள்கை களான தீண்டாமை ஒழிப்பு, சுதேசியாய் வாழ்தல், கதர் பரப்புதல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு காங்கிரசுக் கட்சி யில் 1919-இல் சேர்ந்து தமிழ் நாட்டில் காங்கிரசு இயக்கம் வளர்வதற்கு அரும்பாடு பட் டார். அவரைப்போல் தமிழ் நாட்டில் காங்கிரசு கட்சியை வளர்த்தவர் யாரும் இல்லை யென்றே சொல்லலாம். காங் கிரசின் ஒத்துழையாமை இயக் கம் காரணமாக தான் வகித்து வந்த 29 பதவிகளிலிருந்து விலகினார். காங்கிரசில் இருந் துக்கொண்டே தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக் கள் கல்வியிலும், வேலைவாய்ப் பிலும் முன்னேற வகுப்பு வாரி பிரதிநிதித்துவச் சட்டத்தை, ஒவ்வொரு காங்கிரசு மாநாட் டிலும், தீர்மானமாகக் கொண்டு வந்தார். 1925-ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில், காங் கிரசுக் கட்சியின் தலைவராக இருந்துக்கொண்டும் தீர்மானம் கொண்டுவந்தார். ஆனால் அனைத்து மாநாடு களிலும் பெரியாரின் வகுப்பு வாரி பிரதிநிதித்துவ தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இதனால் காங்கிரசு கட்சியானது தாழ்த் தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் என்பது வெற்று வார்த்தையே என கூறிக் கொண்டு காங்கிரசு கட்சியி லிருந்து தனது தோழர்களுடன் வெளியேறினார். தன்னுடைய கொள்கைகளை நிறைவேற்றுவ தற்காக 1925ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். சுயமரியாதைக் கொள்கை களை பரப்புவதற்காக குடி அரசு இதழையும் வெளியிட் டார். சுயமரியாதை இயக்கத் தினுடைய முக்கியமான கொள்கை “அனைவருக்கும் அனைத்தும்” கிடைக்க வேண்டும் என்பதேயாகும்.
சுயமரியாதை இயக்கம் தமிழ்மொழிக்கு உயர்வை வழங்கியது. எப்படியெனில், சென்னை மாநிலக்கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசியராக இருந்த குப்புசாமி சாஸ்திரிக ளுக்கு ரூ.300- மாதச் சம்பளமும், அதே கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்த நமச் சிவாயம் முதலியாருக்கு ரூ.81 மாதச் சம்பளமும் வழங்கப் பட்ட கொடுமை நிகழ்ந்தது. பெரியார் இதைக் கண்டித்து, விடுதலை நாளிதழில் அறிக்கை விட்டப்பின்னர்தான் நமச்சி வாய முதலியாருக்கும் ரூ.300- மாதச் சம்பளம் வழங்கப் பட்டது. இதே போல் பல நிகழ்வுகளில் தந்தை பெரியார் தமிழுக்கான உரிமையை நிலைநாட்டியுள்ளார். தமிழில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தவர் பெரியாரே ஆவார்.
பால்ய விவாகத்தையும், தேவதாசி முறையையும் ஒழித்து விதவைத் திருமணத்தை ஆத ரித்து பெண்களுக்கான உரி மைகளை பெற்றுத் தந்தவர் தந்தை பெரியாரே ஆவார். தாழ்த்தப்பட்டவர்கள் பேருந் திலும், ரயிலிலும் பயணம் செய்ய வழி வகுத்தது சுயமரி யாதை இயக்கமேயாகும்.
சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை, தமிழ் நாட்டை ஆண்ட திராவிட கட்சிகளும் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசும் கடைபிடித்து நடைமுறைபடுத்தியதால், இன்று தமிழ்நாடு இந்தியாவி லேயே அனைத்து துறைகளி லும் முன் மாதிரி மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றிய அரசு நீட், க்யூட் போன்ற நுழைவுத் தேர் வுகளை கொண்டு வந்தும், “புதிய கல்விக்கொள்கை” முறையை கொண்டு வந்தும் தமிழ்நாடு மக்களை வஞ்சிக் கிறது.
பெரியார் சுயமரியாதை இயக்க கொள்கைகள் இன்று, வடமாநிலங்களிலும் பரவி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தி வருகிறது. வடமாநில தலைவர்கள் எல்லாம் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் கல்வி வேலை வாய்ப்பு அனைவருக் கும் கிடைக்கவேண்டும் என முழங்குகின்றார்கள். ஸனாதன தர்மம் ஒழிந்து, சமத்துவ தர் மம் மக்களிடம் ஏற்பட சுயமரி யாதை இயக்கக் கொள்கை களை தமிழர் தலைவர் தொடர்ந்து பாடுபட்டு வரு கிறார். அவரின் ஆணைப்படி நடந்து நாமெல்லாம் விழிப் புடன் செயல்படவேண்டும் என்று கூறி முடித்தார்.
அவரைத் தொடர்ந்து உதவிக் கல்வி அலுவலர் ஓய்வு பா.ஜெகதீசன். தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் ஆ.இலட்சுமி பதி, மாவட்ட கழக இலக்கிய அணித்தலைவர் பெ.சயராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரிய ரணித் தலைவர் கோ.வேல் முருகன், மக்கள் அதிகாரம் ஆ.ராமலிங்கம், ஜம்பை கிளைக் கழக செயலாளர் வை.சேகர், கவிஞர்.மண்ணாங்கட்டி உள்பட பலர் பேசினார்கள். முன்னதாக அரசம்பட்டு திரு வள்ளுவர் தமிழ்சங்கத்; தலை வர் வெ.சவுந்தரராசனின் மந் திரமா? தந்திரமா? என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடை பெற்றது.
இக்கூட்டத்தில் சங்கரா புரம் நகரத்தலைவர் கலை. அன்பரசு, கழக மகளிரணி ஜெயலட்சுமி ஏழுமலை, கல் லக்குறிச்சி மாவட்ட இளைஞ ரணி செயலாளர் கே.முத்து வேல், ரிஷிவந்தியம் ஒன்றிய கழகச் செயலாளர் அ.தமிழர சன், திருக்கோவிலூர் ஒன்றிய கழகச் செயலாளர் மு.இளங் கோவன், சங்கராபுரம் தமிழ்ச் சங்க செயலாளர் ச.சாதிக் பாட்சா, மூரார்பாளையம் கிளைக்கழகத் தலைவர் இரா.செல்வமணி, கடுவனூர் கிளைக் கழகத்தலைவர் கி.ஆனந்தன், ஊராங்கனி அன்பழகன், மாரி அன்பழகன், கல்லக்குறிச்சி முனைவர் தெ.சாந்தக்குமார், ஊராங்கனி கோகுல் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். இறுதியில் ரிஷிவந்தியம் ஒன் றிய கழகத்தலைவர் அர.சண் முகம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment