முஜிரா நடனம் என்று கூறி பீகார் மக்களை அவமதிப்பதா? பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 27, 2024

முஜிரா நடனம் என்று கூறி பீகார் மக்களை அவமதிப்பதா? பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம்

featured image

பாட்னா, மே 27 பிரதமர் மோடி முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீகார் மக் களை அவமதித்து விட்டார் என காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கார்கே பேசியதாவது: நாங்கள் பாகிஸ்தானுடன் போரிட்டு வங்காளதேசத்துக்கு சுதந்திரம் பெற்று தந்தோம். சீனா இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளை யும், சாலைகளையும் கட்டி ஆக்கிரமித்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மவுனம் காக் கிறார். பா.ஜ., அரசு பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது.

முஜ்ரா நடனம்:

பிரதமர் மோடி முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீகார் மக்களை அவமதித்து விட்டார். ஏனெனில் முஜ்ரா நடனம் பீஹாரில் ஆடப்படுகிறது. இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல். ராகுலுக்கும், மோடிக்குமான தேர்தல் அல்ல. இவ்வாறு அவர் பேசினார். தேர்தல் பிரசாரத்தில், இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக இண்டியா கூட்டணி கட்சியினர் ‘முஜ்ரா’ நடனமாடலாம் என பிரதமர் மோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

No comments:

Post a Comment