வெள்ள தடுப்பு திட்டம் தயாரிக்க தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஜப்பான் பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

வெள்ள தடுப்பு திட்டம் தயாரிக்க தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஜப்பான் பயணம்

சென்னை, மே 11- சென்னைக்கான வெள்ளத் தடுப்பு பெரிய திட்டம் (மாஸ்டர் பிளான்) தயாரிப்பது தொடர்பான பயிற்சிக்காக, தமிழ் நாடு அரசு அதிகாரிகள் 4 பேர் ஜப் பான் சென்றுள்ளனர். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையால் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், பாதிப்புகளை முழுமையாக கட்டுப் படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது, சென்னையில் பள்ளிக்கரணை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

2ஆம் கட்ட பயிற்சி: இதைய டுத்து, சென்னையில் உள்ள நகர்ப்புற ஆற்றுப் படுகைகளில் வெள்ளத் தடுப்புக்காக மாபெரும் திட்டத்தை (மாஸ்டர் பிளான்) உருவாக்கி செயல் படுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு அதிகாரி களுக்கு ஜப்பானில் பயிற்சி அளிக்கப் படுகிறது. ஏற்கெனவே ஒரு கட்ட பயிற்சி முடிந்த நிலையில், தற்போது 2ஆம் கட்ட பயிற்சி இன்று(மே 11) முதல் 18ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வழங்கப் படுகிறது. இதில் பங்கேற்பதற்காக, தமிழ் நாடு நீர்வளத் துறை சென்னை வடிநில செயற்பொறியாளர் ஜி.ஆர்.ராதாகிருஷ் ணன், திருவள்ளூர் செயற்பொறியாளர் ஆர்.அருண்மொழி, சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், மழை நீர் வடிகால் கண்காணிப்பு பொறி யாளர் எஸ்.பாஸ்கரன் ஆகியோர் ஜப்பான் சென்றுள்ளனர்

No comments:

Post a Comment