பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் ஆகியோர் லாகூர் மத்திய சிறை யில் தூக்கிலிடப்பட்டனர். இந்த மூவரில் ஒருவரான சுகதேவ் பிறந்த நாள்இந்நாள் (1907).
இவர்கள் தூக்கிலிடப்பட்ட போது தந்தை பெரியார் ‘குடி அரசு’ இதழில் (29.3.1931) இவ் வாறு எழுதினார். “பகத்சிங் தனது கொள்கைகளை நிறைவேற்றக் கைக்கொண்ட முறைகளில் சிறிது தவறு நடந்து விட்டது என்பதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும் அவருடைய கொள்கை குற்றமுடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணிய மாட்டோம். அதுவேதான் உலகத்தின் சாந்த நிலைக் கொள்கையுமாகும். சாதாரணத்தில் வேறு எவரும் அடைய முடியாத பெரும் பேறு என்று சொல்லி பகத்சிங்கை மனமார, வாயார, கையாறப் பாராட்டுகிறோம்” என்று எழுதினார் தந்தை பெரியார்.
Wednesday, May 15, 2024
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment