சென்னை, மே 23-குவைத் கட லோர காவல்படையால் கடந் தாண்டு கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, ஒன்றிய வெளியுறவுத் துறை செயலருக்கு தமிழ்நாடு தலைமை செயலர் சிவ் தாஸ்மீனா நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நேற்று முன்தினம் (21.5.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
குவைத்தில் கைதான ராமநாத புரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி செய்தி வெளி யாகியுள்ளது. கடந்தாண்டு டிச. 5ஆம் தேதி குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய் யப்பட்ட 4 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க உரிய தூதரக வழிமுறை களைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியு றுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்.9ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக் கும்படி ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும், இது வரை விடுதலை செய் யப்படாமல் இருப்பதால், அவர் களை விடுதலை செய்ய உரிய தூத ரக நடவடிக் கையை மேற்கொள்ள தமிழ்நாடு தலைமை செயலர் சிவ் தாஸ் மீனா, ஒன்றிய வெளியுறவுத் துறை செயலருக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் எழுதியுள் ளார். -இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment