பிரிஜ் பூஷனின் மகனுக்கு கொடுத்த சீட்டை பா.ஜ.க. திரும்பப் பெற வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 14, 2024

பிரிஜ் பூஷனின் மகனுக்கு கொடுத்த சீட்டை பா.ஜ.க. திரும்பப் பெற வேண்டும்!

featured image

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

புதுடில்லி, மே 14- பாலியல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்தார்.
பெண் மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரில், இந்திய மல் யுத்த சம்மேளனத்தின் மேனாள் தலைவரும், பா.ஜ.க. நாடாளு மன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச் சாட்டுகளை பதிவு செய்ய டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் 11.5.2024 அன்று உத்தரவிட்டது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் பதிவாகி உள்ளதாக நீதிமன்றம் கூறியுள் ளது. முன்னதாக பிரிஜ் பூஷண் மீதான 5 வழக்குகளில் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

அவர் மீது இந்திய தண்ட னைச் சட்டம் பிரிவுகள் 354, 354ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 354டி பிரிவின் கீழும் கடந்த ஆண்டு ஜூன் 15 அன்று டில்லி காவல்துறை குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. பிரிஜ் பூஷனின் செயலாளர் வினோத் தோமர் மீதும் கீழ் பிரிவு 506இன் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளளது.

உத்தரப் பிரதேசத்தின் கைசர் கஞ்ச் தொகுதியின் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பிரிஜ் பூஷணை இம் முறை பாஜக வேட்பாளராக நிறுத்தவில்லை. அதற்குப் பதி லாக அவரது மகன் கரண் பூஷன் சிங்கை வேட்பாளராக்கியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில்,
‘பாலியல் குற்றம் சாட்டப் பட்ட பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அவரது மகன் கரண் பூஷண் சிங்குக்கு பா.ஜ.க. தேர் தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது.

பிரிஜ் பூஷனின் மகனுக்கு பா.ஜ.க. சீட்டுப் பரிசு கொடுத் துள்ளது. ஹத்ராஸ், கதுவா, அங்கிதா பண்டாரி வழக்குகளை பா.ஜ.க. மூடி மறைக்கிறது.
அதேபோல் பாலியல் குற்றச் சாட்டில் சிக்கிய பிரஜ்வல், குல்தீப் செங்கர், ராம்துலால் கவுர், பிரிஜ் பூஷன் சிங் ஆகி யோருக்கு அடைக்கலம் கொடுக் கிறது.
இதுபோன்ற நபர்களின் கட் சியாக பா.ஜ.க. மாறிவிட்டது. எனவே பிரிஜ்பூஷன் சரண் சிங்கின் மகனுக்கு வழங்கப்பட்ட மக்களவை சீட்டை திரும்பப் பெறவேண்டும்’ என்று பதிவிட் டுள்ளார்.

No comments:

Post a Comment