பெட்ரோலியத்திற்கு அடுத்து, மின்சாரம்தான். என்றாலும், இடையில் ஹைட்ரஜன் முயற்சித்துப் பார்க்கிறது. அதற்கு வெற்றி கிடைத்தாலும் கிடைக்கும் என்று வல்லுநர்கள் சொல்கின்றனர். ஜீரோ ஏவியா என்ற நிறுவனம், 76 பேரை ஏற்றிச் செல்லும் ஹைட்ரஜன் விமானத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த விமானத்தை அமெரிக்காவிலுள்ள ‘அலாஸ்கா ஏர்லைன்ஸ்’ 2023இல் பெற்றுக் கொள்ள ஒப்பந்தம் போட்டுள்ளது.இந்த ஏர்லைன்ஸ் 2024இல் லண்டன் – ரோட்டர்டாம் வழித்தடத்தில், வர்த்தக விமான சேவையை ஹைட்ரஜன் எரிபொருள் விமானம் மூலம் துவங்கும். உலக காற்று மாசுபாடுக்கு விமானங்கள் கணிசமான பங்களிக்கின்றன. இதைக் குறைக்க மின்சார விமானங்களை பல நிறுவனங்கள் பரிசோதித்து வருகின்றன.
ஹைட்ரஜன் எரிபொருளும் மாசு ஏற்படுத்தாத ஒரு எரிபொருள் தான். துளி கூட புகையை வெளியே விடாமல், முற்றிலுமாக எரிந்து போகும் தன்மையுள்ள ஹைட்ரஜன், மிச்சமாக விட்டுச் செல்வது தண்ணீர் துளிகளைத் தான். மேலும் திரவ ஹைட்ரஜன் சக்தி வாய்ந்த எரிபொருளும் கூட. இதில் முக்கியமான விஷயம், தற்போது விமானத் திற்காக ஹைட்ரஜன் இயந்திரங்களை பயன்படுத்த விருப்பது, ஜீரோ ஏவியா தான். அதுவும் அடுத்த இரு ஆண்டுகளில் ஹைட்ரஜன் விமானத்தை சந்தைக்குக் கொண்டுவரவிருப்பது ஜீரோ ஏவியா தான். எனவே, அடுத்தடுத்து மாசில்லா விமான சேவையில் சாதிக்க அதற்கு ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது.
No comments:
Post a Comment