புதுடில்லி, மே 23- அகில இந்திய காங்கிரஸ் கட்சி யின் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே பி.டி.அய். செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சமூகத்தில் வெறுப் பையும், பிரிவினையை யும் பரப்பும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிராக மக்கள் இப்போது போராடுகிறார்கள். ஜனநாயகம் மற்றும் அர சமைப்பைக் காப்பாற் றுவதற்காகவும் போராடு கிறார்கள். அதனால் மக்கள் தங்கள் ஆதரவை காங்கிரசுக்கு அளித்து வருகிறார்கள். ராமன் கோவில், இந்து- முஸ்லிம், இந்தியா-பாகிஸ்தான் என்ற பெயரில் பா.ஜ.க. மீண்டும் மீண்டும் உணர்ச்சி ரீதியாக மக்களை தூண்டி கொள்ளையடிக் கிறது. அவர்களின் உண் மையான முகத்தை மக் கள் இப்போது புரிந்து கொண்டார்கள்.
நான் நாடுமுழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளேன். இந்தியா கூட்டணிக்கு மக்களின் ஆதரவு பெரும் அளவில் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட் டணியில் உள்ள கட்சி களுக்கு இந்த முறை அதிக இடங்கள் கிடைக் கும். பா.ஜ.க. பெரும் பான்மை பெற விடாமல் தடுப்போம். பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடி யாது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்காக போரா டுவது மக்கள்தான். அதாவது எங்களுக்காக அல்ல. நாங்கள் பின்பற் றும் சித்தாந்தத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள். நமக்காகப் போராடு கிறார்கள். பா.ஜ.க. பின்தங்கி விடும். நாங்கள் முன்னேறுவோம் என் பது தெளிவாகத் தெரி கிறது. இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. அரசமைப்பை காப் பாற்ற அழைக்கிறேன். ஜனநாயகம் என்பது அனைத்து இந்தியர் களின் அடிப்படை உரி மைகள், பேச்சு சுதந்தி ரத்தை காப்பாற்றுவதா கும். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண் டாட்டம் ஆகிய 2 முக் கிய பிரச்சினைகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
2 கோடி வேலை வாய்ப்பு, வெளிநாடு களில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பது, விவ சாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது போன்ற வாக்குறுதிகளை பா.ஜ.க.-வால் நிறைவேற்ற முடியவில்லை. பா.ஜ.க. அரசு பொய்களை பேசி மக்களை முட்டாளாக் குகிறது. அவர்களின் நோக்கங்களை மக்கள் புரிந்துகொண்டு அவர் களுக்கு எதிராக இருக் கிறார்கள். பா.ஜனதா எப்போதுமே பர பரப்பை உருவாக்குகிறது. அரசமைப்பை மாற்ற 3-இல் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண் டும். 400 தொகுதிகள் என்று யார் சொல்ல ஆரம்பித்தார்கள்? ஆர். எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் இட ஒதுக்கீடு பற்றி பேசியுள் ளார். அரசியல் சட்டத் தில் எழுதப்பட்டுள்ளதை அவர்களால் பறிக்க முடியாது.
மத்தியப்பிரதேசம், கருநாடகா, மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கவிழ்க்கப் பட்டன.
No comments:
Post a Comment