குன்னூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 15, 2024

குன்னூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

featured image

குன்னூர், மே 15- சுயமரியதை இயக்க நூற்றாண்டு விழா — குடிஅரசு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் 12.5.2024 அன்று இன்னிசை இல் லம் குன்னூரில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
மாவட்ட தலைவர் மு.நாகேந்திரன் தலை மையேற்க, பொதுக்குழு உறுப்பினர் ஆ.கருணாக ரன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஈஸ் வரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
இக்கருத்தரங்கத்தில் சிறப்புரையாற்றிய பெரியார் மருத்துவ குழுமத் தலைவர் இரா.கவுதமன், சுயமரியாதை இயக்கம் தோன்றிய விதம், அதன் செயல்பாடுகள் மற்றும் குடிஅரசு இத ழின் வரலாற்றைப் பற்றி சிறப்பாக எடுத்துக் கூறினார். சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம் ‘அனைவர்ககும் அனைத் தும்’ என்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முன் னேட்டமே என்றார்.

மேலும் 3 சதவிகிதம் இருந்த பார்ப்பனர்கள் 97 சதவிகிதம் அரசு பதவி களையும் கைப்பற்றியதை தெனனிந்திய நல உரிமை சங்கம் அதே 97 சதவிகிதம் அரசுப் பதவிகள் மற்றும் கல்லூரிகளில் பிற்படுத் தப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் இடம் பெற எவ்வாறு இடஒதுக்கீடு அடிப் படையில் மாற்றியது என் பதை எடுத்துக் கூறினார்.
முன்னதாக துவக்க உரையாற்றிய பகுத்தறி வாளர் கழக செயலாளர் இரா.வாசுதேவனின் மகள் சுதா தமிழ்நாடு அளவில் நடைபெற்ற பெரியார் பற்றிய பேச்சுப் போட்டியிலும் எழுத்துப் போட்டியிலும்,இரண்டு முறை முதல் பரிசு வாங் கினார் என்பது குறிப்பி டத்தக்கது. இவர் பேசு கையில் நீதிக்கட்சி, சுய மரியாதை இயக்கம் திரா விடர் கழகமாக மாறிய தைப் பற்றியும், நீதிக்கட்சி ஆட்சியில் சமூகப் புரட்சி ஏற்பட்டதும் பிற்படுத் தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு கல்வியில் இடஒதுக்கீடு வழங்கிய தையும், பொருளாதாரத் தில் பின்தங்கியவர்களுக்கு கட்டண சலுகை வழங்கி யதையும், உண்டு உறை விடப் பள்ளிகளை உரு வாக்கியதும் சமூகம் முன் னேற்றம் ஏற்பட்டதையும் பள்ளர் பறையர் ஆதி திராவிடர்களாக மாற்றி யதையும், சிறப்பாக எடுத் துக் கூறினார். அவரின் சிறப்பான பேச்சாற்ற லைக் கண்ட மரு.கவுத மன் அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்ததோடு நீலமலை மாவடட மகளிர் கழக அமைப்பாளராக அறிவித்தார். கழகத் தோழர் கள் கைதட்டி வரவேற்ற னர். இறுதியாக மாவட்ட கழக துணை செயலாளர் யா.சத்தியநாதன் நன்றி யுரை வழங்கினார்.

No comments:

Post a Comment