23.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* மேற்கு வங்கத்தில் 2010 முதல் வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களும் ரத்து.. உயர்நீதிமன்றம் உத்தரவு
* இதற்கு பதிலளித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மாட்டோம் என்று கூறியதுடன், பாஜகவை கடுமையாக சாடியிருக்கிறார்.
* ராணுவத்தின் கூலியாட்களாக அக்னி வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர். நாங்கள் அதை ரத்து செய்வோம், ராகுல் உறுதி.
* முனைவர் பட்டப்படிப்புக்கு நெட் தேர்வு கூடாது, அய்தராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம், தேர்தல் அறிக்கை, ஆம் ஆத்மியுடன் இணைந்து செயல்படுவது தொண்டர்களிடையே உற்சாகத்தை தந்துள்ளது. அதிக இடங்களை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ராஜஸ்தானில் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பதிவிட்ட கிளீன் ஸ்வீப்பை பாஜகவால் மீண்டும் செய்ய முடியுமா என்பதே மய்யக் கேள்விக்குறியாகி உள்ளது.
* படிவம் 17சி-அய் பதிவேற்றினால் மார்ஃப்பிங் செய்வார்கள்.. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கவலை
தி இந்து
* சர்ச்சைக்குரிய சட்டத்தை அமல்படுத்துவதற்காக உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு இணங்க மாநில அரசு தயாராகி வரும் நிலையில், திரிபுராவில் உள்ள காங்கிரஸ் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்துவதை எதிர்க்கும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா
* அதானி குழுமம் 2014இல் இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை வாங்கி இந்தியாவில் மூன்று மடங்கு விலைக்கு விற்றதாக கூறப்படும் லண்டனில் உள்ள பைனான்சியல் டைம்ஸ் செய்தியை எடுத்துக்காட்டும் வகையில், பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தாக்குதல் நடத்தியது. இந்தியா பிளாக் அரசாங்கத்தை அமைத்தால் “ஊழலை” விசாரிக்க ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு அமைப்பதாக அது உறுதியளித்தது.
தி டெலிகிராப்
* “தேர்தல் ஒருதலைபட்சமானது. சமாஜ்வாடி கட்சி (இந்திய தொகுதி) வேட்பாளருக்கு ஆதரவாக அலை உள்ளது. தற்செயலாக 2019இல் பாஜக வெற்றி பெற்றது.
* பாஜக மட்டும் ஏன் உண்மையான வாக்காளர் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்கவில்லை: திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி.
*’பழைய தந்திரங்கள்’ இலக்கை எட்ட உதவாது. பாஜகவின் பிரித்தாளும் தந்திரம் உ.பி. ஆசம்கர்க் வாக்காளர்களிடம் எடுபடவில்லை.
* பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் வாழ்க்கையில் பெரிய மாற்றம் இல்லை. தான் பெற்றது அனைத்தும் மம்தா ஆட்சியில் கிடைத்தது என்கிறார் மேற்கு வங்க வாக்காளர் கொல்கத்தா சமையல்காரர்
* 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு வாக்களித்தோம். ஆனால் பாஜக துரோகம் செய்துவிட்டது என அரியானாவில் மக்கள் குமுறல்.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment