புதுடில்லி, மே 12– டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன் றம் இடைக்காலப் பிணை வழங்கியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
மாண்புமிகு டில்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங் கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு இடைக்காலப் பிணை அளித்துள்ள மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற் கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது மக்களாட்சியை வலிமைப் படுத்தியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு இந்தியா கூட்டணியையும் பலப்படுத்தியுள்ளது. தேர்தலில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெறும் வேகத்தை இது கூட்டி யுள்ளது.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா
ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மோடி, மேனாள் பிரதமர் ஆகி விடுவார் என்றும், அப் போது தன் அரசியல் செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்துகொள்ள போது மான அவகாசம் அவரிடம் இருக்கும் என்றும் பவன்கேரா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா!
கெஜ்ரிவாலுக்கு பிணை கிடைத் துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித் துள்ளார். இந்த பிணை, தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் உதவிகரமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட் டுள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியிருப்பது ஜனநாயக வரலாற்றில் மிக முக்கிய முன்னுதார ணம் என்று கேரள முதலமைச்சர் பின ராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை, சிறையில் வைப்பதன் மூலம் ஜனநாயகத்தின் அடிப்படை களை சங்பரிவார் அமைப்புகள் சிதைத்து விட்டன – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, அதிகாரத்தை அப்பட்டமாக தவறான பயன்படுத்துவதன் மூலம் தேர்தல் வெற்றிகளை பெற நினைக்கும் பாஜக அரசுக்கு விழுந்த அடி என்றும் அதிருப்தியை ஒடுக்குவதன்மூலம், சர் வாதிகார ஆட்சி நீடித்திருக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் நினைவூட்டியிருக்கிறது என் றும் பினராயி விஜயன் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜனநாயக சக்திகளுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் வகையில், தேர்தலில் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிருந்தா காரத்!
உச்சநீதிமன்ற தீர்ப்பு அமலாக்கத் துறையின் முகத்தில் விழுந்த அறை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் பிருந்தாகாரத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக ளுக்கு எதிராக அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது என்று அவர் கண்டனம் தெரிவித்துள் ளார்.
ஒரு முதலமைச்சரையே சிறை வைத்தால், தேர்தலில் போட்டியிட கட்சிகளுக்கு இடையே எப்படி சம நிலை இருக்கும் என்று அவர் வினவி யுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சர்வா திகார ஆட்சிக்கு எதிராக காற்றின் திசை மாற்றி அடிப்பதன் பெரிய அடை யாளம் என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
அரசியலில் உண்மையை பேசுவதால் தான் கெஜ்ரிவாலை பா.ஜ.க.வுக்கு பிடிக்கவில்லை என்று அவர் விமர்சித் துள்ளார். இந்தியாவின் அரசமைப் பையும், ஜனநாயகத்தையும் இந்தியா கூட்டணி பாதுகாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
டி.ராஜா!
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை கிடைத்துள்ள தன் மூலம் இறுதியிலும் அவருக்கு நீதி கிடைக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள் ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜன நாயகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு என்று அவர் கூறியுள்ளார். ஒன்றிய அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை மக்கள் புரிந்து கொண்டு வரு கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள் ளார்.
பா.ஜ.க., அரசுக்கு உச்சநீதிமன்றம் மூலம் சவுக்கடி விழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment