பட்டாசு ஆலை விபத்து: விதிமீறலே காரணம் - இருவர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

பட்டாசு ஆலை விபத்து: விதிமீறலே காரணம் - இருவர் கைது

சிவகாசி, மே.11- சிவகாசி அருகே 10 பேரை பலிவாங்கிய பட்டாக ஆலை வெடிவிபத்துக்கு விதிமீறலே காரணம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆலையின் போர்மேன், குத்தகைதாரர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத் தில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலை யில் 18 அறைகள் இருந்த நிலையில் இதனை முத்துக்கிருஷ்ணன் என்பவர் குத்தகைக்கு எடுத்து பட்டாசு உற்பத்தி செய்து வந்ததாக கூறப்படுகிறது. பேன்சி ரக பட்டாசுகள் அதிக அளவில் இந்த ஆலையில் தயாரிக்கப்பட்டன.

ஓரிரு நாள்களுக்கு முன் மதிய வேளை யில் இந்த பட்டாசு ஆலையின் ஒரு அறையில் பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்து கொண்டு இருந்தபோது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற் பட்டது. இதில் அந்த அறையில் இருந்த வெடிகள் மற்றும் மூலப்பொருட்கள் வெடித்துச்சிதறின.
இந்த வெடிவிபத்தில் அந்த ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட் டிருந்த 10 பேர் உடல் கருகியும், உடல் சிதைந்தும் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் 14 பேர் படுகாயம் அடைந்த னர். மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் ஆலையில் இருந்த 10 அறைகள் தரை மட்டமாகின.

இந்த வெடிவிபத்து குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஆலையின் உரிமையாளர் சரவணன், குத்தகைதாரர் முத்துகிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக் குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணன் (39), சுரேஷ் (43) ஆகிய 2 பேரை கைது செய் தனர்.
பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு விடக் கூடாது என்று விதி இருந்தும் விதிகளை மீறி சரவணன் தனது ஆலையை குத்தகைக்கு விட்டதும், அங்கு அதிக அளவில் தொழிலாளர்கள் பணியில் ஈடு பட்டதும் காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விதிமீறல்கள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment