வருந்துகிறோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 29, 2024

வருந்துகிறோம்

featured image

காரைக்குடி கழக மாவட்ட பகுத் தறிவாளர் கழக மேனாள் தலைவர் ப.சுந்தரம் (வயது 83) நேற்று (28.5.2024) இரவு 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் இயற்கை எய் தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு வாழ்விணையர் நாக லட்சுமி, மகன் வள்ளுவன், மகள் கள் பொற்செல்வி, பூங்கோதை ஆகியோர் உள்ளனர்.
காரைக்குடியில் இயங்கும் ஒன்றிய அரசு நிறுவனமான சிக்ரியில் நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இளமை காலம் தொட்டே தி.மு.கழகத்திலும், பகுத்தறிவாளர் கழகத்திலும் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
குறிப்பாக விடுதலை நாளிதழ் சந்தா திரட்டுவதில் தேனீ போல பணியாற்றி தொடர்ந்து செயலாற்றியவர்.

அதேபோல் கழக நிகழ்வுகள் அனைத்திற்கும் நிதி திரட்டுவதிலும் தனித்துவத்துடன் இயங்கியவர்.
மறைந்த ப.சுந்தரம் அவர்கள் தான் மறைந்த பின்பு எவ்வித மூட சடங்குகளும் செய்யப் படாமல் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று தன் கைப்பட எழுதி மாவட்ட கழகக் காப்பாளர் சாமி.திராவிட மணியிடம் வழங்கியுள்ளார். அதன்படியே ஏற்பாடுகளும் செய்யப் பட்டு அவருடைய இறுதி நிகழ்வு இன்று (29.5.2024) மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

No comments:

Post a Comment