சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் மிதவை உணவகக் கப்பல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 27, 2024

சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் மிதவை உணவகக் கப்பல்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவிப்பு

சென்னை, மே 27- முட்டுக்காட்டில் பிறந்த நாள், திருமண நிச்சய தார்த்தம் உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தும் வசதியுடன் மிதவை உணவகக் கப்பல் விரை வில் சுற்றுலா பயணிகள் பயன்பாட் டுக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

முட்டுக்காடு படகுக் குழாம்

சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் 36 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முட்டுக்காடு படகுக் குழாம் வங்கக் கடலின் முகத்துவாரம் அருகில் உள்ளது. இந்தப்பகுதியில் உள்ள நீர் விளையாட்டு மய்யத்தில் படகோட்டுதல், காற்றில் உலாவுதல், சறுக்கு விளையாட்டு, விரைவுப் படகு உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த பகுதியாகும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் இயங்கி வரும் இந்த படகு குழாம் கடந்த 1984 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு சிறியதும், பெரியதுமாக எந்திரப் படகுகள், வேகமாக செல்லும் எந் திரப் படகுகள், 2 பேர் செல்லக்கூடிய வாட்டர் ஸ்கூட்டர் என 37 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இங்குள்ள நீரின் ஆழம் 3 அடி முதல் 6அடி வரைக்கும் இருக்கிறது. தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திற்கு சொந்தமான இந்த படகுக் குழாமிற்கு வாரம் பத்தா யிரம் பேர் பார்வையாளர்களாக வந்து படகுகளில் பயணம் செய்து பொழுதை கழித்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது இங்கு புதிதாக 100 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் மிதவை உண வகக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தளங்களுடன் சொகுசு கப்பல்

இதுகுறித்து ஒருங்கிணைப்பா ளர் எஸ்.கே.ஜெகன்நாத் கூறும் போது, ‘தமிழ்நாட்டில் முதன் முறை யாக, முட்டுக்காடு படகு குழாமில் 125 அடி நீளமும், 25 அடி அகலமும் கொண்ட 2 அடுக்கு கொண்ட சொகுசு மிதவை உணவகக் கப்பல், ரூ.5 கோடி மதிப்பில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த ‘சீன்ஸ்-குரூஸ்’ நிறுவனத்தின் சார்பில், தனி யார் மற்றும் பொதுப் பங்களிப்பு வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மிதவை உணவகக் கப்ப லின் தரைதளம் முழுவதும் குளிர் சாதன வசதியுடன் கூட்ட அரங்கு. சேமிப்பு அறை மற்றும் கழிப்பறை, எந்திர அறையுடன் கப்பல் வடிவ மைக்கப்பட்டுள்ளது. முதல் தளம் திறந்தவெளித் தளமாகவும், சுற் றுலா பயணியர் மேல் தளத்திலும் அமர்ந்து உணவு உண்டு பய ணிக்கும் வகையிலும் வடிவமைக் கப்பட்டுள்ளது.

கப்பலில் பிறந்தநாள் விழா

இந்த படகில் பிறந்த நாள் விழா, திருமண நிச்சயதார்த்தம் மற்றும் நிறுவனங்களின் கூட்டங்கள், மேனாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

வார விடுமுறை உள்ளிட்ட நாட்களில் பொதுமக்கள் பயணம் செய்ய ரூ.1,500 வரை கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்து ஆலோ சனை நடந்து வருகிறது. தென் னிந்திய, வடஇந்திய உணவுகள், சீன உணவுகள் மற்றும் சிறப்பு வாய்ந்த உணவுகள் பரிமாறப்படு கிறது. நாள்தோறும் மாலை 5 மணிக்கு அழகான சூரியன் மறைவு காட்சி பயணம், இரவு 7 மற்றும் 9 மணிக்கு இரவு உணவு விருந்துடன் 3 சேவைகள் அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

குழந்தைகளுக்குப் புதுவித அனுபவம்

குழந்தைகளுக்குப் புதுவித அனுபவத்தை கொடுக்கும் வகை யில் கூட்ட அரங்கில் உள்ள மேடையில் வரவேற்பு இசை, கலை நிகழ்ச்சிகள், 12 அடி உயர கார்ட்டூன் பொம்மைகள் இடம் பெறும். அத்துடன் உரி மம்பெற்ற மதுபான கூடம் உள்ளது. 2 மணிநேரம் படகு குழாம் அமைந்துள்ள நீர் நிலை பகுதியில் சுற்றி வரும் மிதவை கப்பலில் பயணிப்பதன் மூலம் கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து பழைய மாமல்லபுரம் சாலை வரையிலான அழகான காட்சிகளை காண முடியும். சோதனை அடிப்படையில் நடக் கும் இந்த மிதவை உணவகக்கப்பல் முட்டுக்காட்டைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் உள்ள ஏரிகளிலும் தொடங் கும் திட்டமும் உள்ளது’ என்றார்.

இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் இருப்பதால், முட்டுக்காட் டில் மிதவை உணவக கப்பல் விரைவில் பொதுமக்கள் பயன்பாட் டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. பொது மக்களுக்கான கட்டணங் களை நிர்ணயிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அப்பணி கள் முடிவுற்ற பிறகு மிதவை உணவகக் கப்பலில் மக்கள் அனு மதிக்கப்படுவார்கள்’ என்றனர்.

No comments:

Post a Comment