சென்னை, மே 23– புதிய வகை கரோனா பரவி வருவதால், பொது இடங்களுக்கு செல்லும் பொது மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் நேற்று முன் தினம் (21.5.2024), காட்சிப் பதிவு வெளியிட்டு பேசியதாவது:-
அச்சம் வேண்டாம்
கடந்த சில வாரங்களாக சிங்கப்பூர் உள்ளிட்ட நாடு களில் கரோனா பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வருகிறது.
புதிய வகையான கேபி. 2 என்ற வைரஸ் ஒமைக்ரானின் ஒரு வகையை சேர்ந்ததுதான். ஏற் கெனவே, இந்தியாவில் சில பகுதிகளில் இந்த வகை கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நாம் பயமோ, பதற்றமோ அடையத் தேவையில்லை. லேசான பாதிப்பு மட்டுமேதான் பதிவாகியுள்ளது. மிகப் பெரிய பாதிப்புகள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை.
தமிழ்நாட்டில் 18 வயது நிரம் பிய அனைவருக்கும் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த வகை பாதிப்பு ஏற்பட்டாலும் லேசான பாதிப் பாக தான் அது இருக்கும். ஆனா லும், பொதுமக்கள் முன்னெச்சரிக் கையாக இருக்க வேண்டும்.
முகக்கவசம் அணிய வேண்டும்
பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். வீட்டில் வயதா னவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய் மார்கள் இருக்கும் பொழுது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
இவர்களுக்கு உடனே தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள் ளது. தற்பொழுது கரோனா பாதிப்பும் மற்ற பருவ நிலையில் ஏற்படக்கூடிய நோய் பாதிப்பு போல மாறிவிட்டது.
ஆண்டுக்கு ஒரு சில காலங்களில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் அச்சம் தேவையில்லை. தடுப்பூசி முழுமை யாக செலுத்திக் கொண்டதால் போதுமான எதிர்ப்புசக்தி நம் மிடம் இருக்கிறது. அப்படி பாதிப்பு அதிகரித்தாலும் அதனை சமாளிக்கக்கூடிய கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் உள்ளது.
-இவ்வாறு அவர் பேசினார்.
அச்சம் வேண்டாம்:
ஒன்றிய அரசு அறிவிப்பு
சிங்கப்பூரில் மீண்டும் கரோனா வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக கரோனா வைரஸ் மீண்டும் மாறு பாடு அடைந்து தீவிரமாக தாக்கி வருகிறது. இந்த மாறுபாடுகள் கே.பி.1, கே.பி.2 என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இந்த தொற்று பரவல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கும் நிலையில், இந்தி யாவிலும் இந்த புதிய வகை கரோனா 300-க்கு மேற்பட்டோரை தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
அந்த வகையில் கே.பி.2 வகை கரோனா 290 பேரையும், கே.பி.1 வகை தொற்று 34 பேரையும் பாதித்து இருக்கிறது. 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த தொற்று கண்டுபிடிக்கப்பட் டிருக்கும் நிலையில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 23 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவை அனைத்தும் ஜே.என்.1 மாறுபாட்டின் துணை மாறுபாடுதான் என கூறியுள்ள ஒன்றிய சுகாதார அமைச்சகம். இதில் மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டிய அளவுக்கு கடுமையான பிரச்சினை எதுவும் இல்லை என் றும் கூறியுள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் அச்சமோ, பதற்றமோ தேவை இல்லை என்றும் சுகாதார அமைச் சக வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
No comments:
Post a Comment