பெங்களூரு, மே 13– ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் 18ஆவது மக்களவை தேர்தலில் இதுரை 3 கட்டத்தின் மூலம் 283 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.
இந்த 283 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 188 தொகுதிகளை கைப் பற்றும் என்றும், பாஜக 95 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என புலனாய்வு ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சி களின் ஆய்வின் மூலம் தகவல் வெளி யாகியுள்ளது.
இன்னும் நான்கு கட்ட தேர்தல் உள்ள நிலையில், தங்களுக்கு தோல்வி உறுதி என உணர்ந்து கொண்ட மோடி உள்ளிட்ட பாஜகவினர் இந்து – முஸ்லிம் வன்முறையை தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சு, பாகிஸ்தான் தொடர்பான பேச்சு, “இந்தியா” கூட்டணிக் கட்சிகளை வைத்து பொய் தகவல்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜகவின் இழிவான பேச்சை நாட்டு மக்கள் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது தங்களுக்கு ஆதர வாக உள்ள “கோடி மீடியா” ஊடகங்கள் மூலம் மதவெறி வகுப்புவாதத்தை பரப்பி தேர்தலுக்கு முன் வன்முறையை கிளப்புவதில் பாஜக தீவிரமாக உள்ளது.
இதன் முதல்படியாக கருநாடகாவில் ஊடகங்கள் மூலம் இந்து — முஸ்லிம் மக்களிடையே மோதலைத் தூண்டும் முனைப்பில் செய்தி தொகுப்பு ஒன்று வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத் தியுள்ளது. கருநாடகாவின் முக்கிய செய்தி சேனலாக உள்ளது “ஆசியா நெட் சுவர்ணா” சேனல்.
இந்த செய்தி நிறுவனம் கடந்த மே 9 அன்று மோடி அரசின் இந்து – முஸ்லிம் மக்கள் தொகையின் புள்ளி விபரத்தை வைத்து ஒரு செய்தி தொகுப்பை வெளியிட்டது. இந்த தொகுப்பை ஆசியா நெட் சுவர்ணாவின் செய்தி தொகுப்பாளர் அஜித் ஹன மக்கனவர் வழங்கிய நிலையில், செய்தி தொகுப்பில்,”நாட்டில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் இந்து மக்களின் எண்ணிக்கை கடும் சரிவை கண் டுள்ள தாகவும், அதே நேரத்தில் முஸ்லிம் களின் மக்கள்தொகை அதிகரித்துள்ள தாகவும்” என சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டது. மேலும் இந்து மக்களின் எண்ணிக்கையை காட்டும் கிராபிக் திரையில் இந்திய தேசிய கொடியும், முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை காட்டும் கிராபிக் திரையில் பாகிஸ்தான் கொடியும் வைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்தன. ஆசியா நெட் சுவர்ணா செய்தி சேனலை கன்னடர்கள் பார்க்க வேண்டாம் என சமூகவலைதளங்களில் கருத்துக்கள் குவிந்தன.
கண்டனங்கள் குவிந்ததால் அலறிய ஆசியா நெட் சுவர்ணா நிறுவனம் முஸ் லிம் மக்களின் எண்ணிக்கை காட்டும் கிராபிக் திரையில் உள்ள பாகிஸ்தான் கொடியை நீக்கி யூடியூப் சேனலில் மட்டும் மத அடையாள சின்னங்களு டன் இந்து – முஸ்லிம் கிராபிக் திரை ஒளிபரப்பப்பட்டது. மேலும் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக ஆசியா நெட் சுவர்ணா கூறியது. ஆசியா நெட் சுவர்ணா சேனல் நிறு வனம் மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? என என கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் விடாமல் கண் டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
ஆசியா நெட் சுவர்ணா சேனல் கன்னட மொழயில் மட்டும் ஒளிபரப் பாகும் செய்தி சேனல் ஆகும். இதன் உரிமையாளராக ஜூபிடர் கேபிடல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவன மாக இருந்தாலும், இந்த செய்தி நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்கு ஒன்றிய பாஜக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரிடம் உள்ளது. இவருக்கு தெரியாமல் மற்றும் தொடர்பு இல்லாமல் “இந்திய முஸ்லிம் மக்களுக்கு பாகிஸ்தான் கொடி” கிராபிக் திரை ஒளிபரப்பாக வாய்ப்பில்லை என்பதால், இந்து – முஸ்லிம் மக்களிடையே மத வன்முறையை கிளப்பும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது தெளிவாக உணரப்படுகிறது.
No comments:
Post a Comment