மோடியை தோற்கடிக்க வேண்டும்.. வேலையை பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

மோடியை தோற்கடிக்க வேண்டும்.. வேலையை பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.!

featured image

சென்னை, மே 25 ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மோடிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கிறார்கள். பாஜக தலைவர்களை மோடி ஒதுக்கி வருவதை ஆர்எஸ்எஸ் விரும்ப வில்லை.

அதனால்தான் இந்த முறை ஆர்எஸ்எஸ் தேர்தல் பணிகளை செய்யவில்லை. மோடியை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் – பாஜக இடையே உரசல் நிலவுவதாக வரக்கூடிய செய்திகளுக்கு இடையே பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ஊடகங் களுக்கு அளித்த பேட்டியில், ஆர்.எஸ்.எசில் இருந்து பாஜக கட்சி தனியாக சுதந்திரமாக வளர்ந்துள்ள தாகவும், இனி ஆர்எஸ்எஸ் அமைப் பிடம் கையேந்த வேண்டிய அவ சியமில்லை என்றும் கூறியுள்ளார்.
பாஜகவின் தேசிய தலைவரே இப்படி நேரடியாக ஆர்எஸ்எஸ்பற்றி குறிப்பிட்டு இருப்பது தேசிய அரசி யலில் விவாதத்தை ஏற்படுத்தியுள் ளது. முக்கியமாக 2024 மக்களவைத் தேர்தலுக்கு நடுவில் இந்த பேச்சு வந்திருப்பதுதான் அதிக விவா தத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கெனவே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் இருந்து பாஜகவிற்கு சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வர தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் ஆர்எஸ்எஸ் உறவை பாஜக முறிக்க காரணம் என்றும் கூறப்படுகிறது. பத்தாண்டுகள் ஒன்றியத்தில் பாஜக வும், உத்தரப்பிரதேசத்தில் ஏழு ஆண்டுகளும் ஆட்சியில் இருந்த நிலையில், ஆர்எஸ்எஸ் வட்டாரங் களில் பாஜக மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. ஒன்றிய மாநில அரசாங்கம் “அவர்களுடையது” என்ற போதி லும், தற்போது உத்தரப்பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் பெரி தாக தேர்தல் பணிகளை செய்ய வில்லை என்று கூறப்படுகிறது.

பேட்டி: ஆர்எஸ்எஸ் – பாஜக இடையே நடக்கும் மோதல் தொடர் பாக மூத்த பத்திரிகையாளர் குபேந் திரன் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், பாஜகவில் மோடிக்கு எதிராகவே வேலை செய்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கிறார் கள். மோடிக்கு எதிராக திட்டமிட்டு வேலை பார்க்கிறார்கள். மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு வேலை பார்க்கிறார்கள். பாஜகவில் சிறந்த தலைவர்.. மிக சிறந்த தலைவர் வாஜ்பாய். பாஜக வின் மிக மென்மையான தலைவர் அவர். அப்படி ஒரு தலைவரை பாஜகவில் பார்க்க முடியாது.

அவர் தன்னை முன்னிறுத்தியது இல்லை. ஆனால், மோடி தன்னை முன்னிறுத்துகிறார். இப்போதும் கூட அவர் தன்னை முன்னிறுத்துக் கொள்கிறார். பாஜகவிலேயே இதை பலரும் விரும்பவில்லை. மோடி தன்னை மட்டும் முன்னிறுத்துவதை பாஜகவிலேயே சிலர் விரும்ப வில்லை. இதனால்தான் பாஜகவில் மோடிக்கு எதிராகவே வேலை செய்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கிறார்கள்.

வாஜ்பாய் போல மோடி கட்சியை முன்னிறுத்தவில்லை. மோடி கட் சிக்கு உள்ளேயே பலரை வீழ்த்தி உள்ளார். நிதின் கட்கரியை காலி செய்யவே அவருக்கு எதிரான சிஏஜி அறிக்கையை வெளியிட்டனர். அவருக்கு எதிராக ரிப்போர்ட் வர காரணமே மோடிதான். நிதின் கட்கரியை காலி செய்யவே இப்படி எல்லாம் மோடி செய்துள்ளார். இத னால்தான் கட்சிக்கு உள்ளேயே பலர் மோடிக்கு எதிராக உள்ளனர். மோடியை மேலும் வளர்க்க ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை.
பாஜக தலைவர்களை மோடி ஒதுக்கி வருவதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. அதனால்தான் இந்த முறை ஆர்எஸ்எஸ் தேர்தல் பணிகளை செய்யவில்லை. ஒட்டு மொத்தத்தில் மோடியை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித் துள்ளார்.

No comments:

Post a Comment