முருகனை நம்பிய பக்தர் கடலில் மூழ்கி பலி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 23, 2024

முருகனை நம்பிய பக்தர் கடலில் மூழ்கி பலி!

தூத்துக்குடி, மே 23– தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகன் கோயிலின் முன் இருந்த கடலில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலியானார்.
வைகாசி விசாகத்தன்று முருகனை தரிசித்தால் பலன் கிடைக்கும். வேண் டிய வரம் கிடைக்கும் என்றெல்லாம் நம்பிக்கை வைத்து முருகன் கோயில்க ளில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.
அந்த வகையில் முருகனின் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரம ணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகம் இன்று (23.5.2024) நடைபெறு கிறது.

இந்த நன்னாளில் முருகனை தரிசிக்க பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் கோயில் முன் இருந்த கடல் பகுதியில் பக்தர் ஒருவர் குளித்துக் கொண்டி ருந்தார். அப்போது பெரும் அலையில் அடித்து செல்லப்பட்டார்.
இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

விசாரணையில் அவர் தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த செல்வகனி என்ற இளைஞர் என தெரியவந்தது.
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதாக வந்த தகவலை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அது போல் கடந்த வாரம் கள்ளக் கடல் நிகழ்வின் போது பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment